வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

உறவு உங்களை காயப் படுத்தியதா?

பல நாட்கள் ஒன்றாக கூடி குழாவினோம். எனக்கான உறவு அது, அந்த உறவுக்காக நான். இதை தாண்டி எதுவும் பெரிதல்ல. எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் பொடியென தூளாகி போகும், எங்கள் உறவின் முன்.

ஆனால்...ஓர் சொல், பளீரென வந்தாலும் , இதயம் கனக்கிறது. நம்மவர் தானே என, மனதை தேற்றி முடிப்பதற்குள், அடுத்து ஒரு பளீர் வார்த்தை . 

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

அவமானம் எந்தன் உறவு !

அவமானத்திற்கு பல ரூபங்கள். தினந்தோறும் ஏதோ ஒரு ரூபத்தில் வருவாள். அவள் வரும் கணம், உள்ளம் ஏதும் செய்ய இயலாமல் தவிக்கும். என்னை விட்டு சென்று விடு எனத் தவித்தாலும் , 'நீ இவ்வளவு தான் பொறுவாய்' என நினைவூட்டி செல்லவே அடிக்கடி பலர் ரூபத்தில் வருவாள். சந்திரனின் வாழ்க்கை தவிப்புகள் இது.