செவ்வாய், 15 நவம்பர், 2016

பணத்தை அடையும் எளிய வழி தெரியுமா உங்களுக்கு? | வெற்றி

சிறு வயது முதலே நம் அனைவர் மனதிலும் பதிக்கப் பட்ட ஒரு விஷயம் - பணம் என்பது கிடைப்பதற்கு அறிய ஒரு விஷயம். அதனை அடைய கடுமையாக இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டும், என பல அறியாமை கருத்துக்கள்.

இத்தகைய கருத்துக்கள் மனதில் ஊறி ஊறி, பணம் என்றாலே எங்கே கையை விட்டு போய் விடுமோ என்று அலைகின்றோம்.

ஒரு விதத்தில் உண்மை தான். இன்றைய கால கட்டத்தில் பணம் இன்றி அணுவும் அசையாது.ஆனால், பணத்திற்காக  ஏங்கும் மனப்பான்மையை விட வேண்டும்.

ஏனெனில், அவ்வாறு ஏங்க ஏங்க , பணத்தை பொத்தி வைக்கும் தன்மை அதிகம் ஆகி , பணம் இருந்தும் இல்லாதவன் வாழ்க்கை வாழ நேர்ந்து , எதிர்ப்பலைகள் நம்மை அறியாமலேயே உருவாகி , பணம் கிடைப்பதற்கு அறிய ஒரு விஷயமாகவே மாறி விடும்.

இன்று முதல் உங்களிடம் தேவையான பணம் நிறைவாக உள்ளதாகவும், பணத்தை அடைவது மிகவும் எளிதான ஒன்று எனவும்  நம்புங்கள். ஏக்கம் நீங்கி, முடிந்தால், இல்லை என எண்ணாமல் தேவையான செலவுகளை செய்திடுங்கள். 

இயற்கையாக பணம் உங்களை வந்தடையும் வழி எளிதாக பிறந்திடும்.

மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக