வியாழன், 17 நவம்பர், 2016

மௌனத்தின் பயனை அடைந்த அனுபவம் உண்டா? | வெற்றி

அலுவலகத்தில் கடமையை செவ்வனே செய்து கொண்டு உள்ளீர்கள். ஒருவர் மட்டும் உங்கள் வேலையை மட்டம் தட்டிக் கொண்டே உள்ளார். உங்கள் உரிமைக் குரலை  எழுப்ப ஒரு நொடி போதாது.

ஆனால், மௌனம் சாதித்து பாருங்கள். உங்கள் வேலையை மட்டும் தவறாமல் செய்து வாருங்கள்.

நீங்கள் செய்யும் வேலையில் இருக்கும் திறமையே, அனைவர் மத்தியிலும்  உங்கள் மதிப்பை கூட்டும் . தினம் அருகில் இருக்கும் அலுவலர்கள் மற்றவர்கள் . புரிந்துக் கொள்வர்.

பேசிய வார்த்தைகளை விட பேசாத வார்த்தைகளுக்கு அர்த்தங்கள் அதிகம். உங்கள் மௌனமே அவரின் தரக்  குறைவான செயலுக்கு தகுந்த பாடம் சொல்லி விடும்.

வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      


சரி, அது போகட்டும். நான்கு உறவினர்கள் கூடி உள்ள இடம். ஒருவர் , உங்களை ஒரு குறிப்பிட்ட செயல் செய்ய தகுதி இல்லாதவர் என கேலி செய்கிறார்.என்றோ ஒரு முறை பார்க்கும் உறவினர்கள் அருகில் .

உதாரணத்திற்கு, ' குடும்பத்தை திட்டமிட்டு சரியாக நடத்தாதவர்' என்கிறார். ஆனால், உண்மை அதுவன்று. உங்களைப் போல குடும்பம் நடத்தும் திறமைசாலி இல்லை.

இவ்விடத்தில் மௌனமாக இருப்பீர்களா?ஆம் எனில், அவர் கூறியதை நீங்களே ஆமோதித்ததாக ஆகி விடும். அருகில் இருப்பவர்களும் அதையே அடுத்தவரிடம் கூறுவர்.

எனவே, உங்கள் மௌனதின் பயன் எந்த இடத்தில் மௌனமாக உள்ளீர்கள் என்பதை பொருத்தது.

மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக