திங்கள், 21 நவம்பர், 2016

வாழ்க்கைப் போராட்டத்தின் சரியான தீர்வு எதுவாக இருக்கும் ? | வெற்றி

உங்கள் வாழ்க்கை போராட்டம் நிறைத்ததா ? மனித வாழ்க்கையே போராட்டங்களும், பிரச்சனைகளும்  நிறைந்தது தானே . இது இல்லை எனில் பிணத்தின் வாழ்வாக தான் இருக்கும் .

ஏழை , பணக்காரன் என பாராமல் அவரவர் தகுதிக்கு  ஏற்ப போராட்டத்தின்  தன்மையில் மாறுதல்கள் இருக்கலாம்.வாழ்க்கையே போராட்டம் இல்லாமல் இருக்குமா என்ன ?தேவகிக்கு இரண்டு மகன்கள் . மூத்தவனோ  சாய தொழிலாளி. இன்னொருவனோ விவசாயி. வருடத்தின் பாதி நாட்கள் மழைப் பொழியும். மீதி பாதி நாட்கள் வெயில் அடிக்கும்.

தேவகி எப்பொழுதும் மழை பொழியும் பொழுது மூத்தவனின் தொழிலை நினைத்து கவலையுடனும் , வெயில் அடிக்கும் பொழுது இளையவனின் தொழிலை நினைத்து கவலையுடனும், ஆக மொத்தம் அனைத்து நாட்களும் கவலையுடனேயே வீட்டின் முற்றதில் அமர்ந்து இருப்பார்.

வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

 
இதனை கவனித்த சாது ஒருத்தர், கவலைக்கான காரணத்தை கண்டறிந்தார். பின், தேவகியைப் பார்த்து, மழை வரும் பொழுது இளையவனின் தொழிலை நினைத்து சந்தோஷப் படுங்கள், வெயில் அடிக்கும் பொழுது மூத்தவனின் தொழிலை நினைத்து சந்தோசப் படுங்கள் என்றார் . அதன் பின்பு தேவகி என்றும் சந்தோஷமாகவே காணப் பட்டார்.

எனவே, வாழ்வின் போராட்டத்தை நம் மனதில் எவ்வாறு எடுத்துக் கொள்கிறோம் என்பதை பொருத்தே தீர்வு அமையும்.

தீர்வு நமக்கு நேர்மறையாய் அமைந்திட, எண்ணங்களும் நேர்மறையாய் அமைந்திட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக