வியாழன், 10 நவம்பர், 2016

நீங்கள் நேர்மறை எண்ணம் கொண்டவரா ? | வெற்றி

இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின்பு எப்பொழுதும் போல் முஹமது அலுவலகம் கிளம்பினார். அன்று அவருக்கு முக்கியமான நாள். அலுவலகத்தில் காலை ...10 மணி அளவில் மீட்டிங் இருந்தது. மிகவும் பரபரப்புடன் உற்சாகமாக நேரத்திற்கு செல்ல வேண்டும் என கிளம்பினார். எண்ணங்கள் அனைத்தும் மீட்டிங் பற்றியே இருந்தது.


போகும் வழியில் நண்பர் கண்ணில் பட்டார். 'என்ன முஹமது, உடல்நிலை ஏதும் சரி இல்லையா என்ன?' என்றார் நண்பர். முஹமதுக்கு என்னவோ போல் ஆகி விட்டது. 'நான் நலம்' என பதிலளித்து விட்டு கிளம்பினார்.

பக்கத்து தெரு பாட்டி ' என்ன கண்கள் சிவந்து உள்ளது என கேட்க ', அலுவலக நண்பர் ' ஏன் மிக களைப்பாக காய்ச்சல் வந்தது போல் உள்ளீர்கள்' என வினாவ , முகமதுவிற்கு உண்மையாகவே அனைத்தும் வந்து விட்டது போல் ஒரு எண்ணம். கடைசியாக அலுவலகத்திற்கு லீவ் போட்டு விட்டு மீட்டிங் செல்லாமலேயே வீடு வந்து சேர்ந்தார்.

முகமது அலுவகம் கிளம்பும் போது உற்சாகமாக இருந்தாலும் , தொடர்ச்சியாக எதிர் மறை வார்த்தைகளை கேட்டதும், அவர் எண்ணங்களும் எதிர்மறை ஆயின. அவர் எதிர் மறையாக எதை நம்பினாரோ அதையே அடைந்தார்.

நேர் மறையான எண்ணங்களும் , நேர் மறை எண்ணங்கள் உள்ள மக்களிடம் பழகுவதும் வாழ்வில் முன்னேற்றத்தை நோக்கிச் செல்ல மிகவும் முக்கியம்.

வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக