வியாழன், 29 டிசம்பர், 2016

புகழ் உங்களை துரத்த வேண்டுமா? | வெற்றி

புகழ் உங்களை துரத்த வேண்டும் எனில் புகழை நீங்கள் துரத்தக் கூடாது. மேலும் புகழ் வேண்டும் வேண்டும் என நினைப்பதனால் புகழ் கிடைத்து விடாது. புகழுக்குரிய செயல்களை வாழ்வில் செய்ய வேண்டும். சில  தலைவர்களை , மனிதர்களை பார்க்கும் பொழுது புகழுக்காகவே பிறவி எடுத்தது போல் இருப்பார்கள். எவ்வாறு?


திங்கள், 26 டிசம்பர், 2016

நம் உடல் பழுத்துப் பட்டு விடுமோ என துடிக்கிறோமா நாம் ? | வெற்றி

நம் வீட்டில் உள்ள இயந்திரம் பழுத்துப் பட்டு விடுமோ என துடிக்கும் நாம் , நம் உடல் பழுத்துப் பட்டு விடுமோ என துடிக்கிறோமா ? இவ்வுலகில் விலை மதிப்பில்லாத ஒன்று நம் உடல். இயற்கையின் அற்புதம்.

கடைக்கு சென்று பணத்தை கொடுத்து எந்த பொருட்களையும் வாங்கி விடலாம். நம் விலை மதிப்பில்லா உடல் உறுப்புகள் கடைகளில் கிடைக்குமா?

மகேஷ் ஒரு கோடிஸ்வரர். எந்த பொருள் வேண்டுமானாலும் வீட்டுக்கே கொண்டு வந்து கொடுக்க ஆட்கள் உண்டு. அனைத்து நேரமும் தொழில் தொழில் என்றே அலைவார். தொழிலில் மிக்க இலாபம்.
 

வெள்ளி, 23 டிசம்பர், 2016

பணம் உங்களை படுத்துகிறதா அல்லது பணத்தை நீங்கள் படுத்துகிறீர்களா ? | வெற்றி

ஒவ்வொரு விளைவிற்கு பின்பும்  கண்டிப்பாக ஒரு காரணம் இருக்கும். உங்களிடம் வாழ்விற்கு தேவையான பணம் சேர வேண்டும். விளைவு என்னவாக உள்ளது? கையில் பணம் உள்ளதா? உண்டு என்றாலும் , இல்லை என்றாலும்  , இந்த விளைவிற்கான காரணம் கண்டிப்பாக உண்டு.

நடராஜ்க்கு வாழ்க்கைக்கு தேவையான பணம் வேண்டும். பல தொழில் செய்து விட்டார் அனைத்திலும் பலன் இல்லை. என்ன செய்ய ? அவர் நண்பனுக்கு பழக்கப் பட்ட ஒருவர் மெஸ் நடத்தி வந்தார். தேவையான அளவு பணமும் சம்பாதித்து வந்தார். இதைப் பார்த்த  நடராஜ் ஒரு முடிவிற்கு வந்தார்.

புதன், 21 டிசம்பர், 2016

கட்டாய திறன் விதியால் வாழ்க்கைக்கு என்ன பலன்? | வெற்றி

24 மணி நேரம் இருந்தும் செய்ய நேரம் இல்லையே என புலம்பும் சூழ்நிலை நம் அனைவர் வாழ்விலும் இருக்கும். கட்டாய திறன் விதியை பயன் படுத்தும் பொழுது, காலத்திற்கு ஏற்ற சரியான செயல் கட்டாய சூழ்நிலையாக உருவாக்கி செய்யும் பொழுது அனைத்தும் சரியாக நடைப் பெறும்.

பார்த்திபன் ஒரு ஆசிரியர். தன் மாணவர்களுக்கு 'கட்டாய திறன் விதி' யை சொல்லி தர விரும்பினார்.

திங்கள், 19 டிசம்பர், 2016

சூழ்நிலையோடு ஒத்துப் போகும் தன்மையை குழந்தைகளிடம் மேம்படுத்த ? | வெற்றி

ஒரு சில குழந்தைகள் இயற்கையாகவே சூழ்நிலையோடு ஒத்துப் போய் விடும். அதையும் தாண்டி , சில குழந்தைகளின் குணநலன்களில், 

வெளிப்புற சூழ்நிலையோடு கூடுதலாக அணுகும் குணம்/ வெளிப்புற சூழ்நிலையில் இருந்து விலகி வாழும் குணம்


என இரண்டு வகைகள் உண்டு.


ராமுவும் சோமுவும் சங்கரின் குழந்தைகள் . ராமு புதிதாக ஏதேனும் மனிதர்களையோ , செயலையோ அணுக நேரிடும் பொழுது வெட்கப் பட்டு கொண்டு ஒதுங்கி விடுவான்.


சோமுவோ புதிதாக ஏதேனும் மனிதர்களையோ , செயலையோ அணுக நேரிடும் பொழுது தைரியம் அளவு மீறி  அங்கேயும் இங்கேயும் ஓடி ஒழுங்கு முறையே இல்லாமல் நடந்துக் கொள்வான்.


இவற்றில் எந்த தனி தன்மையோடு நம் குழந்தை இருந்தாலும் சரி செய்ய வேண்டியது பெற்றோராகிய நம்  பொறுப்பு.


வெள்ளி, 16 டிசம்பர், 2016

தைரியத்தை வளர்ப்பது எப்படி? | வெற்றி

மாதவனுக்கு கார் ஓட்டுவதை நினைத்தாலே பயமாக உள்ளது. இப்பொழுது அவன் தைரியமாக கார் எடுக்க வேண்டும்.எவ்வாறு?

முதல் முறை காரை எடுத்தான். பயமாக இருந்தது. பயத்தை கட்டுப் படுத்தி அடுத்த படிக்கு முன்னேறி சென்றான் . அப்பொழுதும் உள்ளுக்குள் பயமாக இருந்தது. ஆனாலும் அவன் தளர வில்லை. திரும்ப திரும்ப காரை எடுத்து   ஓட்ட ஓட்ட அவன் தைரியம் வளர்ந்தது.பின் ஒரு நாள் சரளமாக காரை ஒட்டி விட்டான்.


வெள்ளி, 9 டிசம்பர், 2016

80/20 விதிமுறையை எவ்வாறு நம் வாழ்க்கையில் செயல் படுத்தலாம் ? | வெற்றி

20 % முயற்சியினால் 80 % வெற்றி கிடைக்க வேண்டும் என்பதே இதன் சாராம்சம். தெரித்தோ தெரியாமலோ இந்த விதிமுறையை நம் வாழ்வில் பயன் படுத்தி உள்ளோம்.  தினமும், பல விஷயங்கள் நாம் செய்ய வேண்டிய வேலைகளாக பட்டியல் இட்டு வைத்து இருப்போம். எதை முதலில் செய்ய வேண்டும்?

20% முயற்சியிலேயே 80 % இலாபத்தை எந்த செயல் கொடுக்கிறதோ அதுவே முதலில் செய்ய வேண்டிய வேலை. இவ்வாறு செய்யும் போது , தின வாழ்வில் அதிக வெற்றியினை கண்டு இருப்போம்.


திங்கள், 5 டிசம்பர், 2016

வாழ்க்கைக்கு சமயோசித புத்தி எவ்வாறு பயன்படும் ? | வெற்றி

அவசர காலத்தில், மிக மோசமான நிலைகளில் இருந்து காக்க வல்லது சமயோசித புத்தி. பதட்டம் இல்லா எண்ண   ஓட்டமே சமயோசித புத்திக்கு பலம் சேர்க்கும்.

மன அழுத்தத்தை குறைத்து , முன்னேற்றமான வாழ்க்கையை வழி நடத்திட , சமயோசித புத்தியே மிகப் பெரிய ஆயுதமாக பயன்படுகிறது.


ஒரு கிராமத்தில் வயதான  விவசாயி தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். தன் கிழங்கு தோட்டத்தில் இந்த வருடம் செடிகளை வைக்க, குழிகளை தோண்டிட, அவர் வயது ஒத்துழைக்க வில்லை . எனவே, சிறையில் உள்ள அவரின் ஒரே  மகனுக்கு கடிதம் எழுதினார்.

வியாழன், 1 டிசம்பர், 2016

மன அழுத்தம் எதை கொடுக்கும்? | வெற்றி

நோய்களின் எஜமானன் மன அழுத்தம். மனதில் ஏற்படும் அழுத்தம் உடலின் பல இடங்களில் அழுத்தத்தை ஏற்படுத்தும். அவ்வாறு ஏற்படும் அழுத்தத்தின் விளைவு நோய்கள் தான்.

மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ள அனைத்து நோய்களுக்கும் முழு முதற் காரணியாக அமைந்துள்ளது மன அழுத்தமே என சர்வே கூறுகிறது.