வெள்ளி, 16 டிசம்பர், 2016

தைரியத்தை வளர்ப்பது எப்படி? | வெற்றி

மாதவனுக்கு கார் ஓட்டுவதை நினைத்தாலே பயமாக உள்ளது. இப்பொழுது அவன் தைரியமாக கார் எடுக்க வேண்டும்.எவ்வாறு?

முதல் முறை காரை எடுத்தான். பயமாக இருந்தது. பயத்தை கட்டுப் படுத்தி அடுத்த படிக்கு முன்னேறி சென்றான் . அப்பொழுதும் உள்ளுக்குள் பயமாக இருந்தது. ஆனாலும் அவன் தளர வில்லை. திரும்ப திரும்ப காரை எடுத்து   ஓட்ட ஓட்ட அவன் தைரியம் வளர்ந்தது.பின் ஒரு நாள் சரளமாக காரை ஒட்டி விட்டான்.இதுவே அனைத்து செயல்களுக்கும் பொருந்தும்.

அனைத்து தைரியம் இல்லா செயல்களுக்கும் மூல காரணமாக அமைவது பயமே.

தைரியத்தை வளர்க்க வேண்டும் என்றால் , பயம் இல்லாமல் இருக்க வேண்டும் என பொருள் இல்லை. பயத்தை கட்டுப்படுத்த தெரிந்து இருக்க வேண்டும்.

வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

 
எந்த ஒரு காரியத்தை முதன் முறை செய்ய ஆரம்பிக்கும் யாருக்குமே பயம் இருக்க தான் செய்யும் . எதிர்த்து நின்று பயத்தை கட்டுப் படுத்தி அடுத்த படிக்கு செல்ல வேண்டும் . இல்லை எனில் பயம் வளர்ந்து கொண்டே சென்று நம்மை ஆதிக்கம் செய்து விடும் .


இரண்டாவதாக செய்ய வேண்டியது , எந்த செயல் பயத்தை ஏற்படுத்துகிறதோ அதை திரும்ப திரும்ப செய்ய வேண்டும்.


திரும்ப திரும்ப செய்யும் பொழுது தைரியம் வளர்ந்துக் கொண்டே செல்லும்.


1. பயத்தை கட்டுப்  படுத்துங்கள்.


2. பயத்தை ஏற்படுத்தும் செயலையே திரும்ப திரும்ப செய்யுங்கள்.


3. திரும்ப திரும்ப  செய்யும் பொழுது தைரியம் தானாக வளரும்.


மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக