திங்கள், 19 டிசம்பர், 2016

சூழ்நிலையோடு ஒத்துப் போகும் தன்மையை குழந்தைகளிடம் மேம்படுத்த ? | வெற்றி

ஒரு சில குழந்தைகள் இயற்கையாகவே சூழ்நிலையோடு ஒத்துப் போய் விடும். அதையும் தாண்டி , சில குழந்தைகளின் குணநலன்களில், 

வெளிப்புற சூழ்நிலையோடு கூடுதலாக அணுகும் குணம்/ வெளிப்புற சூழ்நிலையில் இருந்து விலகி வாழும் குணம்


என இரண்டு வகைகள் உண்டு.


ராமுவும் சோமுவும் சங்கரின் குழந்தைகள் . ராமு புதிதாக ஏதேனும் மனிதர்களையோ , செயலையோ அணுக நேரிடும் பொழுது வெட்கப் பட்டு கொண்டு ஒதுங்கி விடுவான்.


சோமுவோ புதிதாக ஏதேனும் மனிதர்களையோ , செயலையோ அணுக நேரிடும் பொழுது தைரியம் அளவு மீறி  அங்கேயும் இங்கேயும் ஓடி ஒழுங்கு முறையே இல்லாமல் நடந்துக் கொள்வான்.


இவற்றில் எந்த தனி தன்மையோடு நம் குழந்தை இருந்தாலும் சரி செய்ய வேண்டியது பெற்றோராகிய நம்  பொறுப்பு.


நம் குழந்தைகள் சூழ்நிலைகளோடு எவ்வாறு ஒத்துப் போகின்றன  என கண்டு பிடிக்க...

புதியதை அணுகும் பொழுது உங்கள் குழந்தை - அழுகின்றதா ? குழந்தைக்கு மன அழுத்தம் உண்டாகிறதா ? நீங்கள் அவர்களிடம் கெஞ்சும் நிலை ஏற்படுகிறதா?  முடிவுகள் எடுக்க அவர்கள் திணறுகிறார்களா?


இந்த கேள்விகளுக்கு ஆம் என பதில் அதிகமாக இருக்க இருக்க, உங்கள் குழந்தை புதிய சூழ்நிலைகளோடு ஒத்துப் போக மிக கடினப்படும்.


வெளிப்புற சூழ்நிலையோடு கூடுதலாக அணுகும் குணம் உடைய குழந்தைகளினால்  இந்த கேள்விகளுக்கு  மிக இல்லை என்ற பதிலையே நாம் கிடைக்கப் பெறுவோம்.


வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

 
பெற்றோராகிய நாம் செய்ய வேண்டியவை :


1.சூழ்நிலையோடு ஒத்துப் போகும்  தன்மையானது  உங்கள் குழந்தையின் பிறவி குணத்தோடு தொடர்புடையது  என்பதை முதலில் நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.


2.உங்கள் குழந்தை சூழ்நிலையோடு ஒத்துப் போகும் விகிதத்தை மனதில் வைத்து அதற்கு ஏற்ப கூட்டாக  குழந்தையோடு இணைந்து மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்.


3.குழந்தைகளால் சூழ்நிலையை  சமாளிக்க   இயலா பொழுது, சரி செய்து சாந்தப் படுத்தும் அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்.


4.அவர்களுக்கு புதிய சூழ்நிலையின் அடுத்தப் படி என்ன என்று விவரித்து, சிறிது நேரம் கொடுத்தால் பழக்கப் பட்ட ஒன்றாக சூழ்நிலை மாறும் வாய்ப்பு கிடைக்கும்.


5.வெளியே செல்லும் பொழுது அவர்களுக்கு பிடித்த தின்பண்டமோ, பொம்மையோ  எடுத்துச் சென்று சூழ்நிலையை சகஜ படுத்தலாம்.


6.எந்த மன அழுத்தத்தையும் அவர்களிடம் திணிக்காமல் புது செயலில் ஈடுப்பட செய்யலாம்.


7.வெளிப்புற சூழ்நிலையோடு கூடுதலாக அணுகும் குணம் உடைய குழந்தைகளுக்கு ஒரு செயலை பல முறை யோசித்து செய்யவும், தன்னிச்சையாக யோசித்து செய்யும் பழக்கத்தையும் ஏற்படுத்தலாம்.


8.குழந்தைகள் என்ன உணர்வோடு உள்ளார்கள் என்பதை அவர்களே தெளிவாக சொல்ல பழக்கலாம்.


9.உங்கள் குழந்தையின் தனி தன்மைக்கு மதிப்பு கொடுத்து அவர்களின் மதிப்பை அவர்களே உணர செய்யலாம்.


10. "உன்னால் சூழ்நிலையோடு ஒத்துப்போக இயலும்", " உனக்கு  புது செயல்கள் மிகப் பிடிக்கும்", " உன்னால் ஒரு செயல் செய்யும் முன்பு யோசித்து செயல் பட முடியும்" என தைரிய வார்த்தைகள் கூறலாம்.மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக