புதன், 21 டிசம்பர், 2016

கட்டாய திறன் விதியால் வாழ்க்கைக்கு என்ன பலன்? | வெற்றி

24 மணி நேரம் இருந்தும் செய்ய நேரம் இல்லையே என புலம்பும் சூழ்நிலை நம் அனைவர் வாழ்விலும் இருக்கும். கட்டாய திறன் விதியை பயன் படுத்தும் பொழுது, காலத்திற்கு ஏற்ற சரியான செயல் கட்டாய சூழ்நிலையாக உருவாக்கி செய்யும் பொழுது அனைத்தும் சரியாக நடைப் பெறும்.

பார்த்திபன் ஒரு ஆசிரியர். தன் மாணவர்களுக்கு 'கட்டாய திறன் விதி' யை சொல்லி தர விரும்பினார்.ஒரு கண்ணாடி பாத்திரத்தை மேஜையில் வைத்து, பெரிய பெரிய கற்களால் அதனை நிரப்பினார். பின் மாணவர்களை பார்த்து இந்த பாத்திரம் முழுதும் நிரம்பி உள்ளதா என வினாவினார். அனைத்து மாணவர்களும் ஆமாம் என்றனர். இதற்கும் மேல், இந்த  கண்ணாடி பாத்திரத்தை நிரப்ப முடியுமா? என கேட்டார். முடியாது என்றனர் அனைவரும்.


பின் அவர் தன் பாக்கெட்டில் இருந்து சிறு சிறு கற்களை எடுத்து இருந்த இடைவெளிகளை நிரப்பினார். இப்பொழுது ? என்கிறார். அனைத்து மாணவர்களும் திகைத்தனர். இதற்கும் மேல், இந்த  கண்ணாடி பாத்திரத்தை நிரப்ப முடியுமா? என கேட்டார். மாணவர்கள் அனைவரும் அமைதியுடன் பார்த்தனர்.


வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

 
மற்றும் ஒரு பாக்கெட்டில் இருந்து மணலை எடுத்தார். கண்ணாடி பாத்திரத்தில் நிரப்பினார். இப்பொழுது ? , இதற்கும் மேல், இந்த  கண்ணாடி பாத்திரத்தை நிரப்ப முடியுமா? என மீண்டும் கேட்டார். வகுப்பே அடுத்து என்ன என பார்த்தது.


கைகளில் தண்ணீர் பாட்டலை எடுத்து கண்ணாடி பாத்திரத்தில் ஊற்றினார்.


மேலோட்டமாக பார்க்கும் பொழுது சில முக்கிய காரியங்களை மட்டும் செய்யவே வாழ்வில் நேரமில்லை என தோன்றினாலும் , இந்த கட்டாய திறன் விதியை பயன் படுத்தி சரியான செயல்களை வரிசையாக செய்யும் பொழுது, குறிப்பிட்ட நேரத்திலேயே நிறைய செயல்களை முடிக்க முடியும். 24 மணி நேரம் பற்ற வில்லையே என புலம்ப  வேண்டியது இருக்காது.


மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக