வெள்ளி, 23 டிசம்பர், 2016

பணம் உங்களை படுத்துகிறதா அல்லது பணத்தை நீங்கள் படுத்துகிறீர்களா ? | வெற்றி

ஒவ்வொரு விளைவிற்கு பின்பும்  கண்டிப்பாக ஒரு காரணம் இருக்கும். உங்களிடம் வாழ்விற்கு தேவையான பணம் சேர வேண்டும். விளைவு என்னவாக உள்ளது? கையில் பணம் உள்ளதா? உண்டு என்றாலும் , இல்லை என்றாலும்  , இந்த விளைவிற்கான காரணம் கண்டிப்பாக உண்டு.

நடராஜ்க்கு வாழ்க்கைக்கு தேவையான பணம் வேண்டும். பல தொழில் செய்து விட்டார் அனைத்திலும் பலன் இல்லை. என்ன செய்ய ? அவர் நண்பனுக்கு பழக்கப் பட்ட ஒருவர் மெஸ் நடத்தி வந்தார். தேவையான அளவு பணமும் சம்பாதித்து வந்தார். இதைப் பார்த்த  நடராஜ் ஒரு முடிவிற்கு வந்தார்.


அவர் தொழில் இவர் திறனுக்கு உட்பட்ட ஒன்று. அவரிடம் சென்று கூட்டு சேர்ந்து தொழில் கற்றார். சிறிது நாட்கள் கழித்து அதே தொழிலை தனியாக வைத்து கை நிறைய சம்பாதித்தார்.வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      


உங்களிடம் பணம் உண்டு எனில் பிரச்சனை இல்லை, இல்லை எனில் காரணத்தை மாற்றுங்கள். உங்களுக்கு அருகில் பயணம் செய்யும் எவர் நீங்கள் நினைக்கும் பணத்தை சம்பாதித்து கொண்டு உள்ளார் என பாருங்கள்.

ஏதோ ஒரு  காரணம் தான் அவருக்கு பணம் என்ற விளைவை தந்து இருக்கும் இல்லையா? அதையே நீங்களும் செய்யும் பொழுது உங்களுக்கும் அதே தானே நடக்க வேண்டும்.

உங்களால் செய்ய முடிந்த , உங்கள் திறமைக்கு உட்பட்ட, நீங்கள் நினைக்கும் பணத்தை சம்பாதிக்கும் நபரை கண்டு பிடியுங்கள்.

அவர் செய்யும் அதே காரண செயலை நீங்களும் செய்யும் பொழுது, உங்களுக்கு கிடைக்கும் விளைவும் வாழ்விற்கு தேவையான பணத்தை பெற்று தரும்.

மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக