திங்கள், 26 டிசம்பர், 2016

நம் உடல் பழுத்துப் பட்டு விடுமோ என துடிக்கிறோமா நாம் ? | வெற்றி

நம் வீட்டில் உள்ள இயந்திரம் பழுத்துப் பட்டு விடுமோ என துடிக்கும் நாம் , நம் உடல் பழுத்துப் பட்டு விடுமோ என துடிக்கிறோமா ? இவ்வுலகில் விலை மதிப்பில்லாத ஒன்று நம் உடல். இயற்கையின் அற்புதம்.

கடைக்கு சென்று பணத்தை கொடுத்து எந்த பொருட்களையும் வாங்கி விடலாம். நம் விலை மதிப்பில்லா உடல் உறுப்புகள் கடைகளில் கிடைக்குமா?

மகேஷ் ஒரு கோடிஸ்வரர். எந்த பொருள் வேண்டுமானாலும் வீட்டுக்கே கொண்டு வந்து கொடுக்க ஆட்கள் உண்டு. அனைத்து நேரமும் தொழில் தொழில் என்றே அலைவார். தொழிலில் மிக்க இலாபம்.
 


பேரும் புகழும் மிக, எங்கு சென்றாலும் அலை மோதும் கூட்டம். 45 வயதிலேயே அனைத்திலும் சாதனை. வீட்டில் உள்ள அனைத்துப் பொருட்களையும் பராமரிப்பு செய்ய ஆட்கள்.


வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

 
அனைத்தையும் பராமரிப்பு செய்த அவர் , தன் உடலை பராமரிக்க மறந்து விட்டார். வெளிப்புற மாயை பொருட்களுக்கு மதிப்பு கொடுக்க விரும்பிய அவர், இயற்கை இலவசமாக கொடுத்த உடல் தானே எனவோ , தன் உடல் உறுப்புகளுக்கு பராமரிப்பு செய்ய மறந்து விட்டார்.

ஒரு நாள் ஆடி காரில் பயணம் செய்து கொண்டு இருக்கும் பொழுதே அவர் உயிர் பிரிந்தது. 45 வயது தான். ஆடி கார் இருந்து என்ன பலன் ? அனைத்து சொத்துக்களையும் அனுபவிக்க இன்று அவர் இல்லை உலகில்.

டாக்டரிடம் அழைத்து சென்ற பொழுது அவர் கூறிய காரணம்

நுரையீரல் இரத்த குழாய் அடைப்பு.

மருத்துவ முன்னேற்றம் ஏற்பட்டுள்ள இக்கால கட்டத்தில், அவர் தன் உடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவ்வப்போது 'முழு உடல் பரிசோதனை' செய்து இருந்திருந்தால் , உயிரிழப்பை தடுத்திருக்கலாம் .

மருத்துவ உலகின் சர்வே , " நம் போன தலைமுறையில் 60 வயதில் வந்த பரம்பரை நோய்கள் , சூழ்நிலை நோய்கள் , நம் தலைமுறையில் 40 வயதிலேயும் , நம் அடுத்த தலைமுறைக்கு 20 வயதிலேயும் ஆரம்பிப்பதாக கூறுகிறது.

மனதில் விழிப்புணர்வை ஏற்படுத்தி , நம் உடல் நலத்திற்கும் சிறிது நேரம் ஒதுக்குவோம்.

 
 
மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக