திங்கள், 5 டிசம்பர், 2016

வாழ்க்கைக்கு சமயோசித புத்தி எவ்வாறு பயன்படும் ? | வெற்றி

அவசர காலத்தில், மிக மோசமான நிலைகளில் இருந்து காக்க வல்லது சமயோசித புத்தி. பதட்டம் இல்லா எண்ண   ஓட்டமே சமயோசித புத்திக்கு பலம் சேர்க்கும்.

மன அழுத்தத்தை குறைத்து , முன்னேற்றமான வாழ்க்கையை வழி நடத்திட , சமயோசித புத்தியே மிகப் பெரிய ஆயுதமாக பயன்படுகிறது.


ஒரு கிராமத்தில் வயதான  விவசாயி தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். தன் கிழங்கு தோட்டத்தில் இந்த வருடம் செடிகளை வைக்க, குழிகளை தோண்டிட, அவர் வயது ஒத்துழைக்க வில்லை . எனவே, சிறையில் உள்ள அவரின் ஒரே  மகனுக்கு கடிதம் எழுதினார்.


"மகனே!  என் வயதின் முதிர்ச்சியால் இந்த வருடம் கிழங்கு தோட்டத்தில் குழிகளை தோண்டிட முடிய வில்லை.  உன்  தாயும் நானும் மிகவும் கவலையுடன் உள்ளோம். நீ எங்கள் அருகில் இருந்திருந்தால் கண்டிப்பாக எங்களுக்காக இந்த வேலையை செய்து இருப்பாய் என எங்களுக்கு தெரியும்"  என மனம் உருகி கடிதம் எழுதினார்.


வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

 
இதை படித்த சிறையில் இருந்த அவர் மகன் " அன்பு மிக்க தந்தையே ! தயவு செய்து மறந்தும் குழிகளை தோண்டி விடாதீர்கள். அங்கு தான் என் துப்பாக்கிகளை புதைத்து வைத்து உள்ளேன் " என பதில் கடிதம் எழுதினான்.


உடனே, நிறைய காவல் அதிகாரிகள் தோட்டத்தில் சென்று துப்பாக்கிகளை தேடி குழிகளை பறித்து பார்த்தனர். ஆனால், ஒரு துப்பாக்கி கூட அங்கு இல்லை . இந்த விஷயத்தை மகனிடம் தந்தை குழப்பத்துடன் தெரிய படுத்தினார்.


மகன் பதில் கடிதமாக, " இப்பொழுது செடிகளை தோட்டத்தில் நடுங்கள் தந்தையே " என அனுப்பினான்.

நம் இருப்பு இல்லா இடத்திலும் சமயோசித புத்தி எவ்வாறு பயன் தரும் என்பதிற்கு , இந்த  தொன்று தொட்ட கதை ஒரு நல்ல உதாரணம்.

சமயோசித புத்தியை வளர்த்திட இதோ சில டிப்ஸ்:


1. பிறர் பேசுவதை சரியாக கவனித்தல்


2. பிறர் பேசுவதை சரியாக உள்வாங்குதல்


3. பல காரியங்களை ஒரே நேரத்தில் செய்ய பழகுதல்


4. உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டு முடிவெடுத்தல்


5. காரியங்களை சரியாக வரிசை படுத்தி செய்தல்


6. மன அமைதியுடன் அணுகுதல்


7. பதட்டத்தின் சரியான காரணியில் மனதை செலுத்தி அதற்கு தீர்வு காணுதல்


8. உடலுக்கு அசைவை கொடுத்து பதட்டத்தில் இருந்து விடுபடுதல்


9. உங்களுக்கே நீங்கள் உண்மையாக இருத்தல்


10. முழுதும் சரியாகவே நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து விடுபடல்


11. உணர்வுக்கு மகிழ்வளிக்கும் காரியத்தில் தினமும் மனதை செலுத்தி பழக்குதல்


12. இந்த நொடிக்கான வாழ்க்கையை வாழுதல்  

  
மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக