பல வருடங்களுக்கு முன்பு சுள்ளான் என்ற இளைஞர் ஓர் சிறிய கிராமத்தில் வாழ்ந்து வந்தார் . சமூக அக்கறை கொண்ட அவர் மனது , எப்படியேனும் இவ்வுலகை மாற்றி விட வேண்டும் என துடித்தது. பெரும் முயற்சியில் ஈடு பட்டார். முடிய வில்லை . இந்த நாட்டையேனும் மாற்றி விட வேண்டும் என பெரும் முயற்சியில் ஈடு பட்டார் .
கோவிலில், யானை ஒன்று, சிறு கயிரினால், ஒற்றை கால் கட்டப் பட்ட நிலையில் இருந்தது.
அதனைப் பார்த்த ஒரு பக்தருக்கு ஒரே ஆச்சரியம். அருகில் இருந்த யானைப் பாகனிடம் , " உங்களால் , எப்படி இவ்வளவு பெரிய மிருகத்தை ஒரு சிறு கயிரினால் கட்டிப் போட முடிகிறது . ஓடி விடாதா ? எப்படி இங்கேயே நிற்கிறது ?" என்று கேட்டார் .
ராஜன் வேலைக்கு செல்லும் நேரத்தில் , வீட்டில் மனைவியிடம் சண்டை . அந்த கடுப்பை கம்பெனியில் அவர் கீழ் வேலை செய்யும் தொழிலாளிகளிடம் காட்ட , சங்கலி தொடர் போல , அனைவரிடமும் மன அழுத்தம் தாக்கியது.
முகில் என்ற பூனை குட்டிக்கு தெரு ஓரத்தில் வீடு. குப்பைகளிலில், தெருவில், கிடைக்கும் உணவை உண்டு வாழ்ந்து வந்தது . ஆனால் , அதன் மனம் ஏற்க வில்லை. காரில் செல்லும் பூனைகளைப் போல் , தனக்கும் நல்வாழ்வு அமைய வேண்டும் என்ற அபிரிதமான ஆசை.
கதிரின் உடன் பிறந்தவர்கள் சந்திராவும் , முருகேசனும் . இவர்களின் தந்தை சாலமன், கிராமத்தில் , ஒரு சைக்கிள் கடை முதலாளி . பெரிய வருமானம் இல்லை எனினும் , வாழ்க்கையை ஓட்ட ஏதோ ஒரு வருமானம் அவருக்கு . தன் பிள்ளைகளை தன்னால் இயன்ற வரை நல்ல நிலைக்கு கொண்டு வர , இயன்ற செலவீனங்கள் செய்து படிக்க வைத்தார்.
ஒரு அழகிய பண்ணை வீட்டில் , இரண்டு குழந்தைகளான அண்ணன் பாலு . தங்கை தாமரை பெற்றோருடன் வாழ்ந்து வந்தனர் . பெற்றோர் வெளியே சென்று இருந்த சமயம் , பாலு வீட்டின் முற்றத்தில் பந்து விளையாடி கொண்டு இருந்தான் . அப்பொழுது , முற்றத்தில் இருந்த சிறிய சிலையை தெரியாமல் பாலு உடைத்து விட்டான் .
மல்லிகா ஒரு கிராமத்துப் பெண் . படிப்பறிவில்லாதப் பெண் . தனக்கு வரும் கணவர் சென்னையில் வேலையில் இருந்து விட்டால் மட்டும் போதும் என்ற கனவு அவளுக்கு. மதன் ஒரு சென்னைவாசி. வருமானம் சொற்பமே. வரவுக்கு மீறிய செலவு செய்யாமல் , மல்லிகா குடும்பம் நடத்தினால் போதும் என்ற எதிர்பார்ப்பு மதனுக்கு.
கூடைகளில் கீரைக் கட்டுகளுடன்,செண்பகம்
,தினம் காலை அந்த மாடி வீட்டு அம்மாவிடம் , " கீரை வேண்டுமா அம்மா ? " என கேட்பது வழக்கம் . " வேண்டாம் " என எதிர் குரல் . ஒரு நாள் , " எத்தனை நாட்கள் வேண்டாம் என தினம் சொல்ல ? " என மாடி வீட்டு அம்மா கடிந்துக் கொண்டார்.
ஆசிரியர் மாணவர்களிடம் கேள்வித்தாளை கொடுத்து பதில் எழுத சொன்னார். அது ஒரு வெற்றுத் தாள் . அனைத்து மாணவர்களும் விழித்தனர். அந்த தாளில் என்ன தெரிகிறதோ அதனைப் பற்றி எழுதுங்கள் என்றார் ஆசிரியர்.
என் மதிப்பை நான் உணர,
என் உடலில் உயிர் ஒட்டி உள்ளதே , இது போதாதா? எந்த இயந்திரத்தை வைத்து உருவாக்கினாலும் உருவாக்க இயலாத உடல் எனக்கு , இது போதாதா? பகுத்தறியும் திறன் உள்ளது , இது போதாதா? என் மதிப்பை பற்றிய உணர்வு , என்னை சார்ந்ததே !இது எனக்கு புரியாதா ?
என்னிடம் அனைத்தும் உள்ளது. வல்லவன் நான் . பணத்தின் அதிபதி நான் . ஒரு எறும்பை நசுக்குவது போல , பிறரை துன்புறுத்தினால் , அவரால் என்ன செய்து விட முடியும்? அனைத்து சுக போகங்களுடன் , இனிதாய் வாழ அல்லவா இப்பிறவி? தவறு செய்தவரை எந்த கடவுள் கண்ணை குத்தியது?
மனிதன் கடவுள் மற்றும் சாத்தானின் கலவை. இரு முகம் கொண்டவன். அவனின் ஒரு முகம் கடவுள் முகம். மறு முகம் சாத்தான் முகம் . அவன் எந்த முகத்தை உலகிற்கு காட்ட வேண்டும் என்பதை சூழ்நிலை நிர்பந்திக்கிறது. அப்பாவிற்கு மாத முதல் நாள் . சம்பளப் பணத்துடன் , இரவு வேலை முடித்து வீடு வருகிறார்.
எத்தனை நாட்கள் தான் அடுத்தவருக்கே உழைத்திட ? எனக்கென்று ஏதும் வேண்டாமா? அடிமை வாழ்க்கைக்கா பிறவி எடுத்தேன் ? தட்ட தட்ட குனிந்தேன் . சாகும் வரை தட்டுகின்றனரே ! அவரைப் போல தானே நானும் பிறந்தேன். ஏழையாக பிறந்தது என் குற்றமா? ஐயகோ ! ஏழையாக இறந்தால், என் பிழை ஆயிற்றே ?
சிலபேர் கூறுவார்கள் - 'நான் என்றுமே யோசிக்க மாட்டேன். நேரடி செயல் தான்' . இவர் யோசிக்கவே மாட்டார். பல செயல்களை மாறி மாறி செய்வார், கால விரயம் செய்வார். கிடைக்கும் பலனோ மிகக் குறைவு.
எங்கோ ஒரு இடத்தில் யாரோ ஒருவர் தவறிழைத்து விட்டார். இங்கே , எனக்கு தவறிழைக்கப் படுகிறது. ஒரு அழகிய கிராமம். அந்த கிராமத்தில் இருந்த அனைவரும் மிக மிக நல்லவர்கள். தரையில் லட்ச ரூபாய் பணம் தவறி கிடந்தாலும் , பொருளுக்கு சொந்தக்காரர் வந்து எடுக்கும் வரை யாரும் அதனை தொடக் கூட மாட்டார்கள்.
எத்தனையோ காரியங்களை முடித்து விட மனம் ஏங்குகிறது. என்னால் செய்ய இயலாதது எதுவும் இல்லை என, பல சாதனைகள் புரிய மனம் துடிக்கிறது. படத்தில் காணும் சகல கலா வேலையை நிஜத்தில் செய்யும் ஹீரோவாக மாற மனம் துடிக்கிறது.
முருகனுக்கும் , விநாயகருக்கும் கொடுக்கப் பட்ட உலகை சுற்றும் வேலையை போன்று முடிக்கப் பட வேண்டிய வேலைகள் நித்தம் பல. செய்யும் வேலையின் முடிவு தான் எதிர்பார்க்கப் படுகிறதே தவிர, எந்த வழியில் , எவ்வளவு கடினத்தில் முடிக்கப் படுகின்றன என்ற தேவை, நடப்பு உலகில் தேவையற்ற ஒன்றாக உள்ளது.
எங்கே உதயமாகிறது இந்த வாய் கொழுப்பு ? பிறரை விட நான் பெரியவன் என்ற எண்ணத்தில் உருவாவது தான் இந்த வாய் கொழுப்பு.
என் பிள்ளையும் நல்ல கல்லூரியில் பெரியப் படிப்பு படிக்கிறாள், அவளுக்கு என்ன? அறிவான பிள்ளை, பிழைத்துக் கொள்வாள் என மனம் பெருமை கொண்டது அமுதனுக்கு. அமுதனைப் போல, தன் பிள்ளைக்கு அனைத்தும் செய்து கொடுத்தாயிற்று அவர்களும் எட்டா கனியை பறிப்பார்கள் என்ற கனவுகள் இல்லா பெற்றோர் உண்டா?
எங்கு சென்று எதனை செய்தாலும் அவசர புத்தி தலையிடுகிறது. கோயிலில் பிரசாதம் வாங்குவதில் ஆரம்பித்து... எந்த சூழலிலும், எங்கே கிடைக்காமல் கையை விட்டு போய் விடுமோ என்ற பயம்.
எங்கு எப்பொழுது எந்த வேலை செய்தாலும் யாரேனும் உதவி செய்ய வந்தால், சிறிது பாரம் குறையுமே என ஏங்குகிறது மனம்!
பிறரை சார்ந்து பழக்கப் பட்ட வாழ்வில் உள்ள தனிச் சுகத்தை, அனைவர் மனமும் அறியும். ஒரு வேலையை யாரையும் சாராமல் முடிக்கும் சுகம் அதை விட சுவாரசியமானது என்பதனை எத்தனை மனங்கள் அறியும்.
வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும், அனுபவித்து வாழ வேண்டிய தருணங்கள். அதனை இயற்கைக்கு ஒன்றிய ஆரோக்கிய எண்ண அலைகளுடன் முழுமையாக பொருத்தி, வாழும் பொழுது , வாழ்க்கை சுவாரசியம் மிகுகிறது.
இந்த உன்னத தருணங்களை, பிறர் இவ்வாறு நினைத்தால் என்னாவது , அவ்வாறு நினைத்தால் என்னாவது ... என... அவர் நினைத்தாரோ இல்லையோ! பிறர் மூலம் நம் சுயம் தற்கொலைக்கு உள்ளாக்கப் படும் பொழுது முழுமையான வாழ்க்கை வாழப் படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.
முப்பாட்டனின் சராசரி ஆயுட் காலம் 35 ஐ , 40 ஐ தாண்டியதே பெரிது என கேள்விப் பட்ட பொழுது வருந்திய உள்ளம், பெற்றோர் தலைமுறை 70 ஐ தாண்டும் வரத்தை பெற்றுள்ளது என கேட்டபொழுது மகிழ்ச்சியாக தான் இருந்தது.
ஆனால், இன்றோ நம் சகோதரர்கள் 40 ஐ தொடும் பொழுதே, 60 வயதில் வர வேண்டிய அனைத்து வியாதிகளுடன் வாழ்வதைப் பார்க்கும் பொழுது , நெஞ்சம் பதைக்கிறது. எப்படியோ , மருத்துவ வளர்ச்சியின் உதவியுடன், சராசரி ஆயுள் 70 ஐ , 80 ஐ தாண்டும் வாய்ப்பை கொண்டு உள்ளோம் என்பது சற்றே ஆறுதல் தான்.
பல நாட்கள் ஒன்றாக கூடி குழாவினோம். எனக்கான உறவு அது, அந்த உறவுக்காக நான். இதை தாண்டி எதுவும் பெரிதல்ல. எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் பொடியென தூளாகி போகும், எங்கள் உறவின் முன்.
ஆனால்...ஓர் சொல், பளீரென வந்தாலும் , இதயம் கனக்கிறது. நம்மவர் தானே என, மனதை தேற்றி முடிப்பதற்குள், அடுத்து ஒரு பளீர் வார்த்தை .
அவமானத்திற்கு பல ரூபங்கள். தினந்தோறும் ஏதோ ஒரு ரூபத்தில் வருவாள். அவள் வரும் கணம், உள்ளம் ஏதும் செய்ய இயலாமல் தவிக்கும். என்னை விட்டு சென்று விடு எனத் தவித்தாலும் , 'நீ இவ்வளவு தான் பொறுவாய்' என நினைவூட்டி செல்லவே அடிக்கடி பலர் ரூபத்தில் வருவாள். சந்திரனின் வாழ்க்கை தவிப்புகள் இது.
இவ்வுலகில் உள்ள கதாபாத்திரங்கள் ஏராளம். ஏற்றுள்ள கதாபாத்திரம் உங்களுக்கு பொருத்தமா என்ற யோசனை என்றேனும் வந்ததுண்டா? சினிமாவில், நடிகர்கள் பல கதாபாத்திரங்களின் நாயகர்கள்.
ஹீரோ செய்யும் கதாபாத்திரம் காமடியனுக்கு பொருந்தாது. ஒரு நல்ல டைரக்டர் அதனை சரியாக உணர்ந்து , யாருக்கு எது சரியோ அதனை சரியாக கொடுத்து அந்த கதாபாத்திரத்தின் முழு திறமையையும் வெளிக் கொண்டு வருவார்.
ஹிட்லரிடம் வேலை செய்த ஒவ்வொரு வேலையாளும், ஹிட்லருக்காக, ஏன் என்ற கேள்வி கூட கேட்க்காமல், தன் இன்னுயிரை மாய்த்துக் கொள்ள தயாராக இருந்தனராம்.
அதே போல் தான், காந்திஜி சொன்னார் என்ற ஒரே காரணத்திற்காக, தன் இன்னுயிரை மாய்த்துக் கொள்ள மிகப் பெரிய மக்கள் கூட்டமே தயாராக இருந்தது.
மற்றவரின் தொழிலில், பங்களிப்பது என்பதே சவாலான ஒன்று. முதலாளியாக தொழில் செய்வது என்பது ? உடல் உழைப்போ, 24 மணி நேர தொழில் பத்தியோ , ஒரு நல்ல தொழிலாளியின் தகுதி. அப்பொழுது முதலாளி ஆகும் கனவு? எடுக்க துணியும் மிகப் பெரிய முடிவுகளை சார்ந்தே உள்ளது.