திங்கள், 30 ஜனவரி, 2017

தினத் தூக்கத்தை சரியான அளவு பெறாவிட்டால் ? | வெற்றி

சரியான தூக்கம் இன்மை , மன அழுத்தத்தை ஏற்படுத்தும் . மன அழுத்தம் கூட , தூக்கத்தினை கெடுக்கும். இவ்வாறு மாறி மாறி ஏற்பட்டால் உடல் என்ன ஆவது ?

நல்ல தூக்கமே அன்றைய தினத்தின் மன அழுத்தத்தை நிர்வகிக்கும் திறனை கொடுக்கும்.


தூக்கமின்மை, சிறிதளவு பொறுமையையே தரும், அதிக கோபத்தையும் எளிதாக தூண்டிவிடும் ஆற்றல் கொண்டது. இதனால் தானாக மன அழுத்தம் அதிகமாகும்.


புதன், 25 ஜனவரி, 2017

ஆற்றல் மிக்க மனிதர்களின் வாழ்க்கைத் தன்மை... | வெற்றி

லண்டனில் வாத்துக்கள் பூங்காவிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. வாத்துக்கள் அனைத்தும் தன் கடமைகளை செவ்வனே செய்து கொண்டு இருந்தன. சில வாத்துக்கள் மட்டும் குளத்தில் அமைதியாக நீச்சல் அடித்து கொண்டு இருந்தன.

திங்கள், 23 ஜனவரி, 2017

பிறர் உங்களை நேசிக்க... | வெற்றி

ஓர் அடர்ந்த அழகிய காட்டில் முயல், யானைக் குட்டி, ஆமை மூன்றும் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தன. ஓடி ஆடி விளையாடின.

ஆனால் அதே காட்டில் ஓர் அழகிய புள்ளி மான் மட்டும் நண்பர்களே இல்லாமல் வருத்தத்தில் வாடியது. 

புதன், 18 ஜனவரி, 2017

குழந்தைகள் மேல் காட்டும் அக்கறை வீண் போகாது ! | வெற்றி

பல பேர் பல விதமாக குழந்தைகளை வளர்ப்பர். இதுதான் சரியான வளர்ப்பு என எதுவும் கிடையாது.

ஆனால் , சமுதாயத்தில் பல பெற்றோர் குழந்தைகளை ஒரு முதலீடாகப் பார்க்கின்றனர். குழந்தையை பெற்று விட்டால் போதும். குழந்தை தானாக வளர்ந்து விடும் என்ற நினைப்பு.


சரியான சரிவிகித உணவோ , நல்ல பள்ளியில் கல்வியோ , அதற்கு என்ன விருப்பம் என்ற அக்கறையோ எதுவும் எடுத்துக் கொள்வது இல்லை.
 

செவ்வாய், 17 ஜனவரி, 2017

எதிர்பார்த்தால் பணம் கிடைத்திடுமா? | வெற்றி

தீனா ஏழைக் குடும்பத்தை சேர்த்தவன். அவன் இருப்பதை வைத்து திருப்தி பட்டு வாழ்க்கையை ஓட்டி வந்தான். அவனிடம் பணம் எதுவும் பெரிதாக சேர வில்லை .

ஐந்து வருடங்கள் கழிந்தது. திருமணமும் ஆனது. இப்பொழுது அவன் மனம் யோசித்தது.

பணத்தின் மேல் எண்ணம் வந்தது. வாழ்க்கைக்கு பணம் முக்கியம் என்ற எண்ணம் வந்தது. பணம் வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பும் வந்தது.
 
    
 

வியாழன், 12 ஜனவரி, 2017

தீர்வாக எந்த வழியை தேர்ந்தெடுப்பீர்கள்? | வெற்றி

மலர்விழி சமையலுக்காக வெங்காயம் அரிந்துக் கொண்டு இருந்தாள். முறத்தை தவறான இடத்தில் வைத்ததால், பாதி அறிந்த வெங்காயம் தரையில் கொட்டி விட்டது.

அவசரமாக சமைத்து விட்டு வெளியில் முக்கிய வேலையாக செல்ல வேண்டும்.

இப்பொழுது மலர்விழிக்கு பல வழிகள் உள்ளது.

ஒன்று: அறிந்த வெங்காயம் கீழே கொட்டி விட்டதே என எண்ணி அழுது கொண்டே இருக்கலாம். அந்த அவசர வேலையை நொந்துக் கொண்டு செய்யாமல் விட்டு விடலாம்.

திங்கள், 9 ஜனவரி, 2017

அனைவருக்கும் நல்லவனாக இருக்க முடியுமா என்ன? | வெற்றி

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் நம் ஒவ்வொருவரின் கண்ணோட்டமும் வெவ்வேறாகத்தான் இருக்கச் செய்யும்.

பனை மரத்தின் அடியில் அமர்ந்து பாலை குடித்தாலும் கள்ளை தான் குடிக்கிறான் என கூறுவார்கள் இல்லையா ? அது தான் விஷயம்.

நாம் என்னத்தான் ஒரு விஷத்தை சரியாக செய்தோம் என  இருப்பினும் எதிரில் இருப்பவர் தன் முன் அனுபவத்தை வைத்து  வேறு விதமாக நம்மை பார்த்தால் என்ன செய்ய இயலும் ? கூறுங்கள்.


வியாழன், 5 ஜனவரி, 2017

உண்மையான மன அமைதி எதில் உள்ளது ? | வெற்றி

செல்வனுக்கு ஒரே மன கோளாறு. பைத்தியம் பிடிப்பது போன்ற மன அழுத்தம். மனதை சரி செய்ய சினிமாவிற்கு சென்று வந்தான் , கோயிலுக்கு சென்று வந்தான், பூங்காவிற்கு சென்று வந்தான். அனைத்து கவலையையும் மறக்க சிகரெட், மது குடிக்கும் பழக்கமும் உண்டு.

எங்கு சென்றும் ஒரு பிரயோஜனமும் இல்லை. மன நிம்மதியை தேடி ஓடினான் , ஓடினான். மிஞ்சியது என்னவோ அவ நம்பிக்கை தான்.


செவ்வாய், 3 ஜனவரி, 2017

பிரச்சனைகளுக்கு மெருகூட்டுவீர்களா என்ன? | வெற்றி

மகள் தன் தந்தையிடம் எப்பொழுதும் வாதாடிக் கொண்டே இருந்தார். ஒவ்வொரு நாளும் புதுப் புது பிரச்சனைகளை தன் தந்தையிடம் கொண்டு வருவார்.

எனக்கு இந்த பிரச்சனை வந்து விட்டது , அந்த பிரச்சனை வந்து விட்டது , இதை எப்படி சமாளிப்பது அதை எப்படி சமாளிப்பது என தன் தந்தையிடம் புலம்பி தள்ளி , ஒன்றும் இல்லாததை எல்லாம் பெரிய பிரச்சனைகளாகக் காட்டினார்.