செவ்வாய், 3 ஜனவரி, 2017

பிரச்சனைகளுக்கு மெருகூட்டுவீர்களா என்ன? | வெற்றி

மகள் தன் தந்தையிடம் எப்பொழுதும் வாதாடிக் கொண்டே இருந்தார். ஒவ்வொரு நாளும் புதுப் புது பிரச்சனைகளை தன் தந்தையிடம் கொண்டு வருவார்.

எனக்கு இந்த பிரச்சனை வந்து விட்டது , அந்த பிரச்சனை வந்து விட்டது , இதை எப்படி சமாளிப்பது அதை எப்படி சமாளிப்பது என தன் தந்தையிடம் புலம்பி தள்ளி , ஒன்றும் இல்லாததை எல்லாம் பெரிய பிரச்சனைகளாகக் காட்டினார்.


ஒரு நாள் தந்தை தன் மகளை அழைத்து , மூன்று ஒரே மாதிரியான பானைகளை கொண்டு வரச் செய்தார். அதில் சம அளவு தண்ணீரை ஊற்றினார். இப்பொழுது மூன்று பானைகளையும் அடுப்புகளில் வைத்து கொதிக்கச் செய்தார்.

பின், முதல் பானையில் ஒரு உருளைக் கிழங்கையும் , இரண்டாம் பானையில் ஒரு முட்டையையும் , மூன்றாம் பானையில் சில காப்பி கொட்டைகளையும் போட்டார்.

வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      


20  நிமிடங்கள் கழித்து, முதல் பானையில் உள்ள உருளை கிழங்கை எடுத்து ஒரு பாத்திரத்திலும், இரண்டாம் பாத்திரத்தில் உள்ள முட்டையை எடுத்து மற்றும் ஒரு பாத்திரத்திலும் வைத்தார். மூன்றாம் பாத்திர காபி தண்ணீரை ஒரு டம்ளரில் ஊற்றினார்.


மூன்று பொருட்களையும் பற்றி தன் மகளை விவரிக்க
ச் சொன்னார். உருளைக் கிழங்கு மிருதுவாகவும் , முட்டை கடினமானதாகவும், காபி தண்ணீர் சுவையானதாகவும் உள்ளதாக மகள் தெரிவித்தாள். எந்த ஒன்று நீ விரும்புவது போல் உள்ளது? எனக் கேட்டார். காபி தண்ணீர் என்றார் மகள்.

இப்பொழுது மகளுக்கு தந்தை விளக்கம் அளித்தார்.


உருளைக் கிழங்கு பிரச்சனையாகிய வெந்நீர் கலனுக்குள் செல்லும் பொழுது கடினமாக இருந்தது. வெந்நீர் கலனுக்குள் 20 நிமிடங்கள் இருந்தப் பின்பு, மிருதுவாகி விட்டது.


முட்டை வெந்நீர் கலனுக்குள் செல்லும் பொழுது மிருதுவாக இருந்தது. வெந்நீர் கலனுக்குள் 20 நிமிடங்கள் இருந்தப் பின்பு, கடினமாகி விட்டது.


காபி கொட்டைகள் பிரச்சனையாகிய வெந்நீர் கலனுக்குள் சென்றவுடன், அந்த பிரச்சனைக்கே மெருகேற்றி சுவையை கூட்டி விட்டன.


நீ  எப்பொழுதும் பிரச்சனைகளை அணுகும் பொழுது காபி கொட்டைகளைப் போன்று பிரச்னைகளுக்கே மெருகேற்ற வேண்டும் என்கிறார். மகளும் தன் தந்தை கூறியதை புரிந்துக் கொண்டு  அதன் போலவே நடந்துக் கொண்டார்.


இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் பிரச்சனைகளை அணுகுவர். சிலர் உருளைக் கிழக்குப் போன்றும், சிலர் முட்டையைப் போன்றும், சிலர் காபி கோட்டையைப் போன்றும் இருப்போம்.


இன்று முதல் காபி கொட்டைகளைப் போன்று பிரச்சனைகளுக்கு மெருகூட்டுவோமே!
 
 

மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக