வியாழன், 5 ஜனவரி, 2017

உண்மையான மன அமைதி எதில் உள்ளது ? | வெற்றி

செல்வனுக்கு ஒரே மன கோளாறு. பைத்தியம் பிடிப்பது போன்ற மன அழுத்தம். மனதை சரி செய்ய சினிமாவிற்கு சென்று வந்தான் , கோயிலுக்கு சென்று வந்தான், பூங்காவிற்கு சென்று வந்தான். அனைத்து கவலையையும் மறக்க சிகரெட், மது குடிக்கும் பழக்கமும் உண்டு.

எங்கு சென்றும் ஒரு பிரயோஜனமும் இல்லை. மன நிம்மதியை தேடி ஓடினான் , ஓடினான். மிஞ்சியது என்னவோ அவ நம்பிக்கை தான்.


செல்வத்தைப் போல தான் , நம்மில் பலர் மன நிம்மதி எங்கு உள்ளது என அறியாமலேயே வாழ்ந்து வருகிறோம்.இருக்கும் இடத்தை விட்டு விட்டு வேறு எங்கு தேடினாலும் தொலைத்தப் பொருள் கிடைத்து விடுமா என்ன ?

வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

 
உண்மையான மன நிம்மதி நம் மனதில் மட்டும் தான் இருக்க இயலும். என்ன நடந்தால் என்ன ? நம் மனதை தாண்டி எது நம்மை ஆதிக்கம் செய்து விட முடியும். யோசித்துப் பாருங்கள். எந்த ஒரு மன சோர்வும் , நம்மை நோக்கி வரும் தின நிகழ்வுகளை நம் மனம் எவ்வாறு எடுத்துக் கொள்கிறது என்பதை பொறுத்தே அல்லவா அமைகிறது.


மன நிம்மதியை வெளியில் தேடாதீர்கள். உங்கள் மனதுள் தேடுங்கள். அதுவே சரி.


மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக