திங்கள், 9 ஜனவரி, 2017

அனைவருக்கும் நல்லவனாக இருக்க முடியுமா என்ன? | வெற்றி

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் நம் ஒவ்வொருவரின் கண்ணோட்டமும் வெவ்வேறாகத்தான் இருக்கச் செய்யும்.

பனை மரத்தின் அடியில் அமர்ந்து பாலை குடித்தாலும் கள்ளை தான் குடிக்கிறான் என கூறுவார்கள் இல்லையா ? அது தான் விஷயம்.

நாம் என்னத்தான் ஒரு விஷத்தை சரியாக செய்தோம் என  இருப்பினும் எதிரில் இருப்பவர் தன் முன் அனுபவத்தை வைத்து  வேறு விதமாக நம்மை பார்த்தால் என்ன செய்ய இயலும் ? கூறுங்கள்.எனவே , ஒரு வரைமுறைக்கு மேல் , அடுத்தவர் என்ன நினைப்பார்களோ என நாம் எண்ணினால் வாழ்வில் எதையுமே திருப்தியோடு செய்ய இயலா சூழ்நிலை பாவியாக மாறி விடுவோம்.

ஒரு கண்ணாடி டம்ளரில் , பாதி தண்ணீர் நிரப்பி வைத்து இருந்தார் ரமேஷ்.


தன் மனைவியை அழைத்து , இதைப் பார்த்தவுடன் என்ன நினைக்கிறாய்  ? என்றார்.


அவள், "டம்ளரில் பாதி நீர் நிரப்பப்  பட்டு உள்ளது " என்றாள்.


பின், தன் தம்பியை அழைத்து  , இதைப் பார்த்தவுடன் என்ன நினைக்கிறாய் ? என்றார்.வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      அவனோ, "டம்ளரில் பாதி வெற்றிடம்  நிரப்பப் பட்டு உள்ளது " என்றான்.

பார்ப்பவர்கள் கோணம் அனைவருக்கும் ஒன்றே இல்லை.


இவ்வுலகில், இதுதான் நல்லவனுக்கான குணாதசியம் என உள்ள பட்டியல்களும், இந்த மாறுபட்ட கோணம் கொண்ட மனிதர்களின் உருவாக்கம் தான்.

இந்த காலத்தில் பலப் பேர், தன் சுயநலனுக்காக போன தலைமுறை பட்டியலை,  இந்த தலைமுறையின் மேல் பயன்படுத்துகின்றனர். சிறிது, காலத்திற்கு தகுந்தவாறு, சுதந்திரத்தை பயன் படுத்தினாலும் தவறானவன் என முத்திரை பதிக்கின்றனர். சமுதாய நியாய தர்மங்கள் என்றப் பெயரில், மனிதனின் தரத்தை குறைக்கின்றனர்.


உதாரணத்திற்கு , மாலா , கலா , ரத்னா என்ற மூன்று  பெண்மணிகளும் ஒரே தெருவில் குடி இருப்பவர்கள். ஒவ்வொரு பெண்மணிக்கும் ஒவ்வொரு குணாதசியம்.


அதில் ரத்னா, காலத்திற்கு ஏற்ற நாகரிக எண்ணம் கொண்டவர். கலா, பழங்கால கோட்பாட்டை மீறினால் சமுதாயம் தவறானவள் என முத்திரை பதித்து விடுமோ என்ற எண்ணம் கொண்டு, சமுதாயதிர்க்காகவே தன் சுய புத்தியை விட்டெறிந்தவள். மாலா முற்றிலும் மாறு பட்டவள்.


மூவரும் திருமணம் ஆனவர்கள். இப்பொழுது பாருங்கள்.


மூவருமே , " தாலிச் செயினை போடாமல் இருந்தால் தவறு " என்ற எண்ணம் கொண்ட சமுதாயத்தில் வாழ்கின்றனர்.


ரத்னா - தாலி செயின் போடுவது இல்லை. காரணம் : சூழ்நிலை கட்டாயம். தினமும் வேலைக்கு சென்று வருகிறார். இருட்டு கட்ட வீடு வரும் சூழ்நிலையும் உண்டு. கால் பவுன் தங்கத்திற்காக கூட கொலை செய்யும் உலகம் இது. தன் பாதுகாப்பிற்காக அவர் தாலி செயின் போடுவது இல்லை. ஆனால், சமுதாயத்தின் பார்வையில் அவள் நிலை என்ன? அவள் நல்லவளா? ஒழுக்கமானவளா? என்பதை ஒரு தாலி செயினால் தான் நிர்ணயிக்க முடியுமா? என்ன?  இந்த சமுதாயத்தின் பார்வை கோணம் அவ்வாறு தானே உள்ளது.


கலா சமுதாயத்திற்கு பயந்தவள். பிறர் என்ன நினைப்பார்களோ ? என எண்ணியே , ஒரு நாள் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும் பொழுது , திருடன் அவள் செயினை பறிக்க , வாகனத்தில் இருந்து தவறி விழுந்து உயிரையே பறி கொடுத்தாள். சமுதாயம் வேடிக்கை பார்த்தது.


மாலாவோ, சமுதாயத்தின் முன்பு, பெண் என்றால் இவள் போல் அடக்கமாக , பெரியவர்களுக்கு மதிப்பளித்து , மங்களகரமாக அல்லவா இருக்க வேணடும் என தோன்றும் அளவு ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி இருந்தார். பூ , போட்டு , குங்குமம் , கழுத்தில் குங்குமம் சுமந்த தாலி , புடவை என யாரும் குறை கூற இயலாத மங்களகரம்.


ஆனால், உண்மையில் கணவனை ஏமாற்றி இன்னொரு ஆணோடு சுற்றும் பெண் அவள். அவளை தான் இந்த சமுதாயம் ஒழுக்கமானவள் என பெயர் சொல்கிறது.


இப்பொழுது சொல்லுங்கள். ஒழுக்கம் எங்கே உள்ளது ? அனைவருக்கும் நல்லவனாக வாழ முடியுமா இந்த சமுதாயத்தில்.
 


மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக