திங்கள், 23 ஜனவரி, 2017

பிறர் உங்களை நேசிக்க... | வெற்றி

ஓர் அடர்ந்த அழகிய காட்டில் முயல், யானைக் குட்டி, ஆமை மூன்றும் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தன. ஓடி ஆடி விளையாடின.

ஆனால் அதே காட்டில் ஓர் அழகிய புள்ளி மான் மட்டும் நண்பர்களே இல்லாமல் வருத்தத்தில் வாடியது. 

பிறவியிலியே ஒரு கால் முடமான அதற்கு தன்னை நேசிக்கவோ, தன்னுடன் விளையாடவோ யாரும் இல்லை என எண்ணும் போது அழுகையை அடக்க முடிய வில்லை.

அத்தருணம் ஒரு சாமியார் அம்மானை கடந்து செல்ல , மானை பார்த்ததும் ' ஏன் அழுகிறாய் ?' என கேட்க , மான் அனைத்தும் கூறியது. சாமியார் உடனே, ' அழாதே! முதலில் நீ உன்னை நேசி. நீ நினைக்கும் நேசம் உனக்கு கிடைக்கும் ' என கூறி விட்டு சென்றார்.

வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      





புள்ளி மான் யோசித்தது. அன்று முதல் தன்னை மிகவும் நேசித்தது. தன் கால் முடத்தை மறந்தது. காடு முழுவதும் மகிழ்ச்சியால் துள்ளி ஓடியது. இதை கண்ட முயல், யானைக் குட்டி, ஆமை மூன்றும் , புள்ளி மானை நண்பனாக்கி கொண்டன. மான் நினைத்தது போல் நண்பர்களும் அதனை நேசிக்க உறவுகளும் கிடைத்தது. அச்சாமியாருக்கும் மனதார நன்றி கூறியது மான்.

மற்றவர்கள் உங்களை நேசிக்க வேண்டும் எனில், முதலில் உங்களை நீங்கள் நேசிக்க வேண்டும்.

மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக