திங்கள், 30 ஜனவரி, 2017

தினத் தூக்கத்தை சரியான அளவு பெறாவிட்டால் ? | வெற்றி

சரியான தூக்கம் இன்மை , மன அழுத்தத்தை ஏற்படுத்தும் . மன அழுத்தம் கூட , தூக்கத்தினை கெடுக்கும். இவ்வாறு மாறி மாறி ஏற்பட்டால் உடல் என்ன ஆவது ?

நல்ல தூக்கமே அன்றைய தினத்தின் மன அழுத்தத்தை நிர்வகிக்கும் திறனை கொடுக்கும்.


தூக்கமின்மை, சிறிதளவு பொறுமையையே தரும், அதிக கோபத்தையும் எளிதாக தூண்டிவிடும் ஆற்றல் கொண்டது. இதனால் தானாக மன அழுத்தம் அதிகமாகும்.நம்மில் பலருக்கு 7 ல் இருந்து 9 மணி நேர தூக்கமாவது தேவை.

நம் போன தலைமுறை செய்த புண்ணியம் , குறைந்த வேலை பளு.

இப்பொழுது பணம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற சமுதாய எண்ணம் அதிகரித்து விட்டதால், அனைத்து துறைகளும் தினம் 10 ல் இருந்து 12 மணி நேரமாவது உழைத்தால் தான் பதவி உயர்வு , சம்பள உயர்வு என மாறி விட்டது.

வேலையில் உள்ள மன அழுத்தம் காரணமாக சரியான அளவு தூக்கத்தினை தொலைக்கிறோம்.
 


வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      


இதனால், உடல் தன் கட்டுப்பாட்டை இழந்து விடுகிறது. இதனை சரி கட்டுகிறோம் என நினைத்து , சிகரெட் , சாராயம் என மனம் நாடுகிறது. இவை அனைத்தும் தற்காலிக சுகமே. சில வருடங்கள் கழித்துப் பார்த்தல், உடல் மேலும் மோசமான சூழலை நோக்கி சென்று இருக்கும்.

மன அழுத்தத்தால் வரும் தூக்கமின்மையை தவிர்க்க , தியானம் , பிடித்த இசையை சிறிது நேரம் கேட்டல் என ஆரோக்கிய வழி முறைகளை மேற்கொள்ளலாம்.

 
 
 


மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக