வியாழன், 12 ஜனவரி, 2017

தீர்வாக எந்த வழியை தேர்ந்தெடுப்பீர்கள்? | வெற்றி

மலர்விழி சமையலுக்காக வெங்காயம் அரிந்துக் கொண்டு இருந்தாள். முறத்தை தவறான இடத்தில் வைத்ததால், பாதி அறிந்த வெங்காயம் தரையில் கொட்டி விட்டது.

அவசரமாக சமைத்து விட்டு வெளியில் முக்கிய வேலையாக செல்ல வேண்டும்.

இப்பொழுது மலர்விழிக்கு பல வழிகள் உள்ளது.

ஒன்று: அறிந்த வெங்காயம் கீழே கொட்டி விட்டதே என எண்ணி அழுது கொண்டே இருக்கலாம். அந்த அவசர வேலையை நொந்துக் கொண்டு செய்யாமல் விட்டு விடலாம்.

இரண்டு: கொட்டிய வெங்காயத்தை விட்டு விட்டு மீதி இருக்கும் வெங்காயத்தை வைத்தே , அரை குறை சமையலை முடிக்கலாம்.

மூன்று: மற்றும் ஒரு வெங்காயத்தை புதிதாக எடுத்து அறிந்து , நேரத்திற்கு கிளம்பாமல் , சூழ்நிலையை மேலும் சிக்கலாக்கலாம்.
 

வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      


நான்கு: இப்படி பட்ட பிரச்சனைகள் அனைவர் வாழ்விலும் சகஜம் என, யோசிக்காமல் கிழே கொட்டிய வெங்காயத்தை வேகமாக அள்ளி , தூய நீரில் வேகமாக கழுவி, தவறை திருத்தி சரியான இடத்தில் முறத்தை வைத்து மீதி வெங்காயத்தையும் அறிந்து விட்டு  சமையலை நேரத்திற்கு முடித்து அடுத்த வேலையை பார்க்கலாம்.

இத்தனையும் தாண்டி யோசித்தால் பல வழிகள் இருக்கும். எந்த வழியை தேர்வு செய்தால் வாழ்வில் முன்னேற்றமோ அதை தேர்வு செய்து விட்டு அடுத்த வழி பார்த்துக் கொண்டு போய் கொண்டே இருக்க வேண்டும்.

இல்லை எனில் , நஷ்டம் என்னவோ நமக்கு தான்.
 


மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக