புதன், 18 ஜனவரி, 2017

குழந்தைகள் மேல் காட்டும் அக்கறை வீண் போகாது ! | வெற்றி

பல பேர் பல விதமாக குழந்தைகளை வளர்ப்பர். இதுதான் சரியான வளர்ப்பு என எதுவும் கிடையாது.

ஆனால் , சமுதாயத்தில் பல பெற்றோர் குழந்தைகளை ஒரு முதலீடாகப் பார்க்கின்றனர். குழந்தையை பெற்று விட்டால் போதும். குழந்தை தானாக வளர்ந்து விடும் என்ற நினைப்பு.


சரியான சரிவிகித உணவோ , நல்ல பள்ளியில் கல்வியோ , அதற்கு என்ன விருப்பம் என்ற அக்கறையோ எதுவும் எடுத்துக் கொள்வது இல்லை.
 
ஆனால், குழந்தை வளர்ந்தவுடன் தன்னை தங்க தாம்பாளத்தில் தாங்க வேண்டும் என்று இவ்வகை பெற்றோர் எதிர் பார்ப்பதும் , குறை கூறுவதும் எவ்விதத்தில் நியாயம்.

குழந்தைகள் மெழுகினைப் போன்றவர்கள். சமுதாயம், குடும்பம் என்ற அமைப்பு தான் நெருப்பாக இருந்து , அவர்கள் வடிவமைக்கப் பட காரணமாக அமைகின்றன.

வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      அவர்களுக்கு என்ற பிறவி குணம் , நல்லதாகவோ, கெட்டதாகவோ என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும் . நம் பக்கம் தவறு இல்லாமல் இருந்தால் தானே , நம் எதிர்பார்ப்பில் உள்ள நியாயம், என்றோ ஒரு நாள் குழந்தைகளுக்குப் புரிய வாய்ப்பு அமையும்.

நாமும் ஒருநாள் குழந்தைகளாக இருந்து வளர்த்தவர்கள் தான் . குழந்தைகள் எண்ணம் என்ன ? என அக்கறை காட்டும் பொழுது, அது வீண் ஆகி விடுமா என்ன ? அவர்கள் நம் இரத்தம். அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மதிப்பையும், அக்கறையையும் கொடுப்போம்.

நமக்கு கிடைக்க வேண்டிய மதிப்பும், அக்கறையும் தானாக கிடைக்கும்.
 
 
 

மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக