திங்கள், 27 பிப்ரவரி, 2017

தாய் நாட்டில் வாழாதவன் தேச துரோகியா? | வெற்றி

உலக மக்கள் பலரிடம் ஒரு கருத்து உள்ளது. தாய் நாட்டில் வாழாதவன் நாட்டிற்கு துரோகம் செய்பவன். அப்பொழுது தாய் மண்ணில் வாழ்பவர்கள் துரோகம் செய்வதில்லையா என்ன? தன் தாய் மண்ணை பிரிந்து வாழும் சூழ்நிலைக்கு தள்ளப் பட்டு விட்டோம் என்ற ஏக்கத்தில் உள்ள மனிதர்கள், மனதிற்கு தான் தெரியும் அவர்களின் ஏக்கம் !

பல சமயங்களில் உண்மைகள் கசக்கின்றன. ஒரு நீச்சல் வீரனின் கதை இது. சிறு வயதிலேயே நீச்சலில் இவனை அடித்துக் கொள்ள ஆளில்லை என்று நம் பாரத தேசமே வியக்கும் தகுதியோடு வாழ்ந்தவன்.

சனி, 25 பிப்ரவரி, 2017

மல்லிகையும் ரோஜாவும் போல... | வெற்றி

ஒரு கிராமத்தில் பூந்தோட்டங்கள் நிறைத்த ஓர் அழகிய வீடு இருந்தது. அத்தோட்டத்தில் மல்லிகை செடிகள், ரோஜா செடிகள், செம்பருத்தி செடிகள் என நிறைய வகை செடிகள் பூத்து குலுங்கின. அனைத்து செடிகளும் மிகவும் மகிழச்சியுடன் வாழ்ந்தன.

ஆனால் , புதிதாக பூத்த மல்லிகை பூவால் மட்டும் சந்தோசமாக வாழ முடியவில்லை.

புதன், 22 பிப்ரவரி, 2017

இனியும் வாய் வார்த்தை எடு படுமா? | வெற்றி

மனித குலத்திற்கு வார்த்தை வாக்கின் மேல் உள்ள நம்பிக்கை முழுதும் போய்விட்டது. நடப்பது என்னவோ இந்த நம்பிக்கை ஏற்படுத்தாத சூழ்நிலைகளே. இந்த நொடியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டு அடுத்த சில நிமிடங்களில் மனம் கூசாமல் அந்த நம்பிக்கையை உடைக்கும் வண்ணம் நடப்பது  தான் இக்கால பேஷன்.

திங்கள், 20 பிப்ரவரி, 2017

சிங்கத்தின் குகை அருகில் மான் குடியிருந்தால்? | வெற்றி

ஒரு அடர்த்த காட்டில் சிங்கத்தின் குகை அருகில் மான் ஒன்று வாழ்ந்து வந்தது. ஒவ்வொரு முறை புல் மேயும் பொழுதும், எங்கே சிங்கம் தன்னை உண்டு விடுமோ என பயத்தில் நடுங்கியது. தன் வாழ்க்கையை பார்க்க முடியாமல் சிங்கத்தை பார்த்தே அதன் வாழ்க்கையின் நோக்கம் இதுவாகவே மாறியது.

சனி, 18 பிப்ரவரி, 2017

நீதிமான்களே நீதி தவறும் பொழுது யாரிடம் சென்று முறையிட? | வெற்றி

நீதியை காக்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் யாருக்காக வாழ்கிறார்கள்? நினைத்தாலே வெட்க கேடாக உள்ளது. வலியவன் அடக்கி ஆள, எளியவன் விலை போனதால் வந்த வெட்க கேடு. நினைத்தாலே கூசுகின்ற அவமானம். 

நாய்க்கு போடும் எலும்பு துண்டுப் போல் பணத் துண்டினை அவ்வப்போது காட்டினால் போதும்  என்ற கர்வத்தினால் அல்லவா நீதி காக்க வேண்டிய நீதிமான்களே வெட்கமற்று நெறி தவறுகின்றனர். 

புதன், 15 பிப்ரவரி, 2017

ஏமாற்றப் படுகிறோம் என தெரிந்தும் ஏமாறுகிறோம் , என்ன கொடுமை ? | வெற்றி

காலையில் எழுந்தது முதல் மாலையில் உறங்கப் போகும் வரை நாம் என்ன இந்த சமுதாயத்தில் அனுபவிக்கிறோம் என எண்ணினால் ,

நாம் எவ்வாறெல்லாம் ஏமாற்ற படுகிறோம் என்பது புரியவரும் . நம் இந்த நிலைமைக்கு காரணம் என்னவாக இருக்க முடியும்? " கோழியில் இருந்து முட்டை வந்ததா அல்லது முட்டையில் இருந்து கோழி வந்ததா " என்ற கதை தான்.

 
 
 
 
 
 

திங்கள், 13 பிப்ரவரி, 2017

எப்பொழுதும் நேர் கோட்டு சிந்தனையுடன் இருப்பது பயன் தருமா ? | வெற்றி

பிரச்சனைகளை அணுகும் பொழுது அதற்கான தீர்வு இதுவாக மட்டும் தான் இருக்க இயலும் என, ஏற்கனவே இருக்கும் சித்தனை தகுதியோடு மட்டும் அணுகினால் ஒரே தீர்வு தான் மனதிற்கு தோன்றும்.

ஒரு கோட்டினை சிறிதாக்க அளிப்பானை மட்டுமே தேடும் மனம், கோட்டின் அருகில் பெரிய கோடு போட்டாலும் , உள்ள கோடு சிறிதாகும் என சிந்திக்க வேண்டும். அவ்வாறு சித்திக்கும் திறன் உடைய மக்களே இன்று பெரிய சாதனைகள் செய்யும் தொழிலில் உள்ளனர்.
 
 
 
 
 
 

சனி, 11 பிப்ரவரி, 2017

நம் உடலை விட்டு உயிர் பிரிவது ஒரு நாள் நடக்க தானே செய்யும்? | வெற்றி

என்றோ ஒரு நாள் மரணம் உறுதி. அது என்று என்ற தேதி தான் நமக்கு தெரியாது. பின்பு எதற்கு வாழ்ந்து முடிப்பதர்க்குள் அத்தனை சுயநலம் ?

நாம் இறக்கும் தருணத்திலேயே, நம்மை சார்ந்த அனைத்தையும் எடுத்துக் கொண்டு செல்வதனைப் போல அத்தனை பதை பதைப்பு.

புதன், 8 பிப்ரவரி, 2017

அனுகூலம் இல்லாமல் அன்பு கிடைக்காது தெரியுமா ? | வெற்றி

கேட்பதற்கு கசப்பாக இருப்பினும், உண்மை என்னவோ இது தான். இவ்வுலக உயிரினத்தின் இயக்கத்தினை ஆழமாக பார்த்தால் சில செயல்களுக்கான விளக்கம் கிடைக்கும்.

ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் பிற மனிதனை சார்த்தே வாழ வேண்டிய கட்டாயம். ஒவ்வொன்றிக்கும் விலை கொடுக்க வேண்டும் அனுகூலத்தினைப் பெற.


திங்கள், 6 பிப்ரவரி, 2017

தொழில் பேச்சு வார்த்தை சிறப்பாக செய்வீர்களா? | வெற்றி

நம்மில் பலர் தொழிலில் ஈடுபட்டு இருப்போம். அல்லது தொழில் செய்வோரோடு பேச்சுவார்த்தை ஏற்படுத்தும் சூழ்நிலை அமைந்து இருக்கலாம்.
பேச்சுவார்த்தை எப்பொழுதும் இணக்கமாக இருந்தால் தான் , பேச்சில் ஈடுபடும் இருவருக்கும் ஒரு கட்டத்தில் , தெளிவு ஏற்பட்டு , ஒரு முடிவாக, சமரச ஒப்பந்தம் ஏற்படும்.

சனி, 4 பிப்ரவரி, 2017

நமக்கு நாமே உத்தரவு பிறப்பித்துக் கொள்ளலாம் ... | வெற்றி

என் மகள் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தப் பொழுது நிகழ்ந்த சம்பவம் இது.

' அப்பா, என் வகுப்பில் ஒன்று நிகழ்ந்தது. சிதேசு நகுலின் மண்டையில் அடித்து விட்டான். நகுல் தலையில் இரத்தம் வழிந்தது.' என்றாள்.

'என்ன!' என்றேன்.

புதன், 1 பிப்ரவரி, 2017

நினைத்தது கிடைத்திட வேண்டுமா? | வெற்றி

கடவுள் நம் கண் முன்னே தோன்றி உங்களை காண நாளை காலை 10 மணிக்கு வருகிறேன் என கூறினால் , நாம் நம்புவோமா? அது சரி , நம் கண் முன்னும் தோன்றி விட்டார்.

கடவுளை பார்க்கும் ஆர்வம் கண்டிப்பாக நம் ஒவ்வொருவருக்கும் இருக்கும். பல வருட காலங்களாக கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகங்கள் அகல , ஒரு நாள் நிஜமாகவே நம் கண் முன்னே தோன்றி விட்டார். நம்புவோமா?