புதன், 15 பிப்ரவரி, 2017

ஏமாற்றப் படுகிறோம் என தெரிந்தும் ஏமாறுகிறோம் , என்ன கொடுமை ? | வெற்றி

காலையில் எழுந்தது முதல் மாலையில் உறங்கப் போகும் வரை நாம் என்ன இந்த சமுதாயத்தில் அனுபவிக்கிறோம் என எண்ணினால் ,

நாம் எவ்வாறெல்லாம் ஏமாற்ற படுகிறோம் என்பது புரியவரும் . நம் இந்த நிலைமைக்கு காரணம் என்னவாக இருக்க முடியும்? " கோழியில் இருந்து முட்டை வந்ததா அல்லது முட்டையில் இருந்து கோழி வந்ததா " என்ற கதை தான்.

 
 
 
 
 
 

அடுத்தவரை கை காட்டி விட்டு நாம் தப்பித்துக் கொள்ள நினைக்கிறோம். கூட்டி கழித்துப் பார்த்தால் , அனைத்தும் புரியும். பாலில் ஒரு துளி விஷம் இருந்தாலும் , பாலே விஷம் தான். ஆனால் , விஷத்தில் ஒரு துளி பால் கலந்தால் , விஷம் பாலாகி விடுகிறதா என்ன? ஒரு தீயவனே போதும் ஒட்டு மொத்த சமுதாயமும் அழிந்திட. உலகில் உள்ள கெட்ட எண்ணம் கொண்ட மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது.

இருக்கும் சில நல்ல எண்ணம் கொண்ட மனிதர்களின் எண்ணமும் பிழைப்பு வேண்டி , தீமை கொண்டதாக மாறுகிறது. இதன் விளைவே , ஏமாற்ற படுகிறோம் என தெரிந்தே ஏமாறுகிறோம். சமுதாயத்தில் விஷத்தை கலந்து விட்டு , தான் மட்டும் அதில் இருந்து தப்பி வாழ்கின்றோம் என தன்னை தானே ஏமாற்றி கொள்கின்றனர் தீமை எண்ணம் படைத்தோர். வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      


தனி மனிதனாய் ஒவ்வொருவரும் இதனை புரிந்து திருந்தாவிட்டால், ஒரு நாள் உலகில் கொடுமைகள் தவிர வேறு ஒன்றையும் பார்க்க இயலாது.

ஒரே பொய்யை ஆயிரம் முறை திரும்ப திரும்ப கூறி உண்மை ஆ
கிதாக மக்களை நம்ப வைத்து காரியம் சாதிப்பது என்பது  , தண்ணீரில் சித்திரம் வரைந்தால்  என்ன பலன் கிடைக்குமோ அதை தான் கொடுக்கும் . இதனை புரிய மனமோ ஏன் மறுக்கிறது . தனி மனித மனமே! யோசிப்பாயாக.
 
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக