சனி, 25 பிப்ரவரி, 2017

மல்லிகையும் ரோஜாவும் போல... | வெற்றி

ஒரு கிராமத்தில் பூந்தோட்டங்கள் நிறைத்த ஓர் அழகிய வீடு இருந்தது. அத்தோட்டத்தில் மல்லிகை செடிகள், ரோஜா செடிகள், செம்பருத்தி செடிகள் என நிறைய வகை செடிகள் பூத்து குலுங்கின. அனைத்து செடிகளும் மிகவும் மகிழச்சியுடன் வாழ்ந்தன.

ஆனால் , புதிதாக பூத்த மல்லிகை பூவால் மட்டும் சந்தோசமாக வாழ முடியவில்லை.

காரணம்: அக்கிராமத்தில் அனைத்து குழந்தைகளும் ரோஜாப் பூக்களையே விரும்பி தலையில் அணிந்தனர். அதனால் ரோஜாப் பூக்கள் தான் அழகு. தான் அவலட்சணம் என அச்சிறிய மல்லிகைப் பூ நினைத்தது. அழுதது.

அச்சமயம், நிறைய பெண்மணிகள் அவ்வீட்டிற்கு வந்து, பூக்களை நோட்டம் விட்டனர். பிறகு, "ஆகா ! இந்த மல்லிகைப் பூக்கள் எத்தனை அழகு. அக்கா, நாங்கள் இன்று இரவு திருமண விழாவிற்கு செல்ல வேண்டும். அனைத்து மல்லிகைப் பூக்களையும் கொடுங்கள்" என்றனர்.

இதைக் கேட்டதும் அம்மல்லிகைப் பூவின் மனம் மலர்ந்தது. அதற்கு உண்மை விளங்கியது.

வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      


இதைப் போல் தான், நம்மில் பலர், நம்மிடம் இருப்பதை விட பிறரிடம் உயரியது உள்ளது தன்னிடம் இல்லையே என வருந்துவர், அதையே தானும் பெற அவர்களை போலவே முயற்சி செய்வர். உண்மை அதுவன்று.

அவரவர்களிடம் தனித்தனி திறமைகள் உள்ளன. ஒருவர் இன்னொருவர் போல் ஆக முடியாது. உங்கள் திறமைகளின் முன்னேற்றம் உங்கள் வாழ்வின் வெற்றி.
 
 
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக