சனி, 18 பிப்ரவரி, 2017

நீதிமான்களே நீதி தவறும் பொழுது யாரிடம் சென்று முறையிட? | வெற்றி

நீதியை காக்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் யாருக்காக வாழ்கிறார்கள்? நினைத்தாலே வெட்க கேடாக உள்ளது. வலியவன் அடக்கி ஆள, எளியவன் விலை போனதால் வந்த வெட்க கேடு. நினைத்தாலே கூசுகின்ற அவமானம். 

நாய்க்கு போடும் எலும்பு துண்டுப் போல் பணத் துண்டினை அவ்வப்போது காட்டினால் போதும்  என்ற கர்வத்தினால் அல்லவா நீதி காக்க வேண்டிய நீதிமான்களே வெட்கமற்று நெறி தவறுகின்றனர். 


அன்று இந்தியனை காக்க ஒரு காந்தி இருந்தார், அவர் இன்று உயிரோடு இருந்து நடக்கும் அக்கிரமங்களைப் பார்த்தால் , இதற்காகவா நம் நாட்டு மக்களுக்காக போராடினோம் என ரத்தக் கண்ணீர் வடிப்பார் . 

அறப் போராட்டம் மறுக்கப் படுகிறது. தனி மனித சுதந்திரம் மறுக்கப் படுகிறது. வேலியே பயிரை மேய்கிறது. கேள்விக் கேட்டு பயனில்லை என பணப் பேய் வேலையை காட்டுகிறது. புரட்சியை அடக்க அடக்கு முறை கையாளப் படுகிறது . 

 

வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      


ஆவது ஆகட்டும்.  எளியவர்களை காட்ட வேண்டியதனை காட்டி அடக்கி விடலாம். மாற்ற முடியாததும் இவ்வுலகில் உண்டு . ஆமாம், அதுதான் ' மனசாட்சி தரும் தண்டனை '. மனசாட்சியை வென்றவர் இவ்வுலகில் இல்லை. நீதியை தவறும் நீதிமான்களே , கேட்டுக் கொள்ளுங்கள் , நீங்கள் நீதி தவறும் பொழுது உங்கள் மனசாட்சியே உங்களை  கொன்று சாய்த்து விடும் .  எழுதிக் கொள்ளுங்கள் உங்கள் வரலாற்றில். நீதி மறுக்கப் படலாம். ஆனால் பொய்க்காது.

மனசாட்சி கொல்வதனை விடவா பெரிய தண்டனை உலகில் உண்டு ? 
   
மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக