திங்கள், 27 பிப்ரவரி, 2017

தாய் நாட்டில் வாழாதவன் தேச துரோகியா? | வெற்றி

உலக மக்கள் பலரிடம் ஒரு கருத்து உள்ளது. தாய் நாட்டில் வாழாதவன் நாட்டிற்கு துரோகம் செய்பவன். அப்பொழுது தாய் மண்ணில் வாழ்பவர்கள் துரோகம் செய்வதில்லையா என்ன? தன் தாய் மண்ணை பிரிந்து வாழும் சூழ்நிலைக்கு தள்ளப் பட்டு விட்டோம் என்ற ஏக்கத்தில் உள்ள மனிதர்கள், மனதிற்கு தான் தெரியும் அவர்களின் ஏக்கம் !

பல சமயங்களில் உண்மைகள் கசக்கின்றன. ஒரு நீச்சல் வீரனின் கதை இது. சிறு வயதிலேயே நீச்சலில் இவனை அடித்துக் கொள்ள ஆளில்லை என்று நம் பாரத தேசமே வியக்கும் தகுதியோடு வாழ்ந்தவன்.


என் தாய் நாடு என் உயிர் என்று கூறி , வெளி நாடுகளில் இருந்து வந்த அனைத்து "ஸ்பான்ஸர் " களையும் வேண்டாம் என தவிர்த்த இளைஞன் . அவன் பெற்றோர்களும் அதையே எண்ணினர். கடைசில்  நடந்தது என்ன? "ஸ்பான்ஸர்" செய்ய வேண்டிய நம் தேசமோ  கை விட்டது. அவன் திறமையை உணர்ந்த வெளி நாட்டவர் இருந்தனர். ஆனால் , உள்நாட்டவர் கண்டு கொள்ள வில்லை. அவன் திறமை இன்று அவனோடு அமுக்கப் பட்டு விட்டது.


வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      அவனைப் போன்று எத்தனை துறைகளில் எத்தனை மனிதர்கள் ? தன் தாய் நாட்டில் தன் திறமைகள் அங்கீகரிக்க பட வில்லை என்ற காரணத்தால், வாய்ப்புகளை நோக்கி வெளி நாடு சென்று , தாய் நாட்டை பிரிந்த வேதனையில் தவிக்கின்றனர். இவர்களா தேச துரோகிகள்?

இதை போன்ற திறமை மிக்க மனிதர்களின்  திறமையை வளர்க்க தக்க வாய்ப்பளிக்காமல், இந்த தேசம் அல்லவா அதன் கடமையை செய்யாமல், இவர்களுக்கு துரோகம் செய்கிறது.


வலிமை உடையோர் வாய்ப்பளிக்காமல், வெற்றி பாதையை நோக்கி செல்ல துடிக்கும் தலை முறையினரை குறை கூறுவது தகுமோ?
 


 
 
 


மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக