புதன், 8 பிப்ரவரி, 2017

அனுகூலம் இல்லாமல் அன்பு கிடைக்காது தெரியுமா ? | வெற்றி

கேட்பதற்கு கசப்பாக இருப்பினும், உண்மை என்னவோ இது தான். இவ்வுலக உயிரினத்தின் இயக்கத்தினை ஆழமாக பார்த்தால் சில செயல்களுக்கான விளக்கம் கிடைக்கும்.

ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் பிற மனிதனை சார்த்தே வாழ வேண்டிய கட்டாயம். ஒவ்வொன்றிக்கும் விலை கொடுக்க வேண்டும் அனுகூலத்தினைப் பெற.அந்த விலை - பணமோ , பொருளோ அல்லது அன்போ , ஆளைப் பொறுத்து மாறு படும் . அவ்வளவு தான்.

தன் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ள கொடுக்கும் விலையில் ஒன்றாகவே 'அன்பு' என்ற ஒன்றும் இக்கால கட்டத்தில் பார்க்க படுகின்றது என்பது தான் கசப்பான உண்மை.

'அன்பு' என்ற பெயரை வைத்துக் கொண்டு தன் காரியத்தினை ஒரு உயிரினம் பிற உயிரினத்திடம் நிறை வேற்றிக் கொள்கிறது. மாறுபட்ட உயிரினங்களும் கண்டிப்பாக உண்டு . ஆனால் மிகச் சொற்பமே . கைவிட்டு எண்ணி விடலாம். அவர்கள் கண்டிப்பாக தியாகிகளாக தான் வாழ்வார்கள். களங்கம் இல்லா அன்பு கொண்டவர்கள் . அவ்வாறு உள்ளவர்களின் அன்பு கிடைக்க புண்ணியம் செய்திருக்க வேண்டும். அழிக்கப் பட்ட உயிரினங்களின் வரிசையில் உள்ளவர்கள்.

மலர் மற்ற சராசரி  தாய்களைப் போல ஒரு தாய். அவளுக்கு செந்தில், மணி என்று இரண்டு மகன்கள். செந்தில் தன் தாய் கூறுவதை சிறு வயது முதலே தட்டாமல் கேட்டு செய்வான். மணி சுய புத்திக்கு எட்டியதனையே எப்பொழுதும் செய்வான். எனவே, மலருக்கு மணியை விட செந்திலிடமே அன்பு அதிகம். காலங்கள் கடந்தன . இரு மகன்களுக்கும் திருமணம் நடந்தது.

சூழ்நிலைகள் மாறின. தன் தாய் சொன்னதையே கேட்டு கொண்டு இருந்த செந்தில் தன் மனைவி சொல்வதை மட்டும் கேட்க ஆரம்பித்தான். மணி வெளிநாட்டுக்கு சென்று தன் மனைவியுடன் வசதியுடன் வாழ்ந்து வந்தான். மலருக்கு வெளிநாடு என்றால் பல வருட நாட்டம்.

 

வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      


இப்பொழுது, செந்தில் , மணி இருவருக்கும் குழந்தை பிறந்தது. தன் தாயின் உதவி இருவருக்கும் தேவை. பல வருடங்களாக செந்தில் மேலேயே மணியை விட அதிக அன்பு வைத்த மலர் , என்ன முடிவு எடுத்து இருக்க வேண்டும்? முன்னுரிமையை செந்திலுக்கு அல்லவா அளித்திருக்க வேண்டும் ? ஆனால் , நடந்தது அது அல்ல. "மணியை பார்த்து பல வருடங்கள் ஆகி விட்டது. மணி கண்ணுக்குளேயே உள்ளான். மணியின் மேல் உள்ள அலாதி பிரியம் என் மனதை வாட்டுகிறது." என கூறிக் கொண்டு வெளி நாடு சென்று விட்டார் மலர்.

மலரை போல் தான் இக்கால கட்டத்தில் பெரும்பான்மையான தாய்மார்கள் உள்ளனர். மலர் ஏன் தன் மேல் காட்டிய அன்பை குறைத்தார் என செந்தில் வெதும்பினால் பலன் இல்லை.  உலகில் மிகவும் அப்பழுக்கு இல்லா உறவு என்றால் தாயை தான் உதாரணம் கூறுவர். இக்கால கட்டத்தில் தாய் உறவே இப்படி என்றால் , மற்ற உறவை நினைத்துப்  பாருங்கள். இதுதான் உலகம் என்பதை புரிந்து கொண்டு , காலத்திற்கு ஏற்ப மனதை மாற்றினால் மட்டுமே வாழ இயலும்.

எனவே, சூழ்நிலைக்கு ஏற்ப , அனுகூல தேவைக்கு ஏற்ப அன்பும் மாறி விடும் உலகில் வாழ்கிறோம். உங்களுக்கு என்றும் அடுத்தவர் காட்டும் அன்பு குறைய கூடாது எனில் , அவர்களுக்கு நீங்கள் கொடுத்து கொண்டு இருக்கும் அனுகூலத்தை தவற விட கூடாது. அனுகூலத்தை எதிர்பார்க்காத அன்பு உங்களுக்கு கிடைத்து கொண்டு இருந்தால் நீங்கள் அதிஷ்ட சாலியே ! 

 
 

மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக