திங்கள், 6 பிப்ரவரி, 2017

தொழில் பேச்சு வார்த்தை சிறப்பாக செய்வீர்களா? | வெற்றி

நம்மில் பலர் தொழிலில் ஈடுபட்டு இருப்போம். அல்லது தொழில் செய்வோரோடு பேச்சுவார்த்தை ஏற்படுத்தும் சூழ்நிலை அமைந்து இருக்கலாம்.
பேச்சுவார்த்தை எப்பொழுதும் இணக்கமாக இருந்தால் தான் , பேச்சில் ஈடுபடும் இருவருக்கும் ஒரு கட்டத்தில் , தெளிவு ஏற்பட்டு , ஒரு முடிவாக, சமரச ஒப்பந்தம் ஏற்படும்.
நாம் இணக்கமான பேசுவதர்க்கு பழகும் பொழுது கவனிக்க வேண்டிய சில விபரங்கள்  உள்ளன.

- நம் எண்ணத்தை மட்டுமே மனதில் வைத்து, எதிரில் இருப்பவர் கருத்தை கருதாமல் பேசுவது தவறான ஒன்று.

- பேசும் முன்பு, நாட்டு நிலவரம் என்ன என புரிந்து அதற்கு ஏற்ப பேச வேண்டும்.

- நம் பேச்சு, ஆமாம் இவர் கூருவது சரிதான் என எண்ண வைக்க வேண்டும்.
 
 

வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

 
- நட்புறவை வளர்க்கும் பேச்சாகவும், அதே சமயம் இவன் விவரமானவன் என நினைக்க வைப்பதாகவும் இருக்கும் போது , நம் பக்கம் சாதகமான ஒப்பந்தம் ஏற்படும்.


- ஆரம்பத்தில் புதிதான அணுகு முறையாக இருந்தாலும், சில நிமிடங்களிலேயே நிலவரம் புரிந்து முடிவு எடுக்கப் பழக வேண்டும்.

- அதிகமாக இறங்காமலும் அதே சமயம், இதுதான் என கறாராக இல்லாமலும், இரண்டுக்கும் நடுவில் இணக்கமான பேச்சுவார்த்தை மேற்கொள்ள தெரிந்து இருக்க வேண்டும்.

- காலத்தை தாமதிக்காமல் சரியான நேரத்தில் காரியத்தை முடிக்க வேண்டும்.

இவை அனைத்தும் ஒன்றாக அமையும் பொழுது, தொழில் பேச்சுவார்த்தை சிறப்பாக அமையும்.

மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக