சனி, 4 பிப்ரவரி, 2017

நமக்கு நாமே உத்தரவு பிறப்பித்துக் கொள்ளலாம் ... | வெற்றி

என் மகள் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தப் பொழுது நிகழ்ந்த சம்பவம் இது.

' அப்பா, என் வகுப்பில் ஒன்று நிகழ்ந்தது. சிதேசு நகுலின் மண்டையில் அடித்து விட்டான். நகுல் தலையில் இரத்தம் வழிந்தது.' என்றாள்.

'என்ன!' என்றேன்.


' ஆம், அப்பா. நகுல் தன் பென்சிலை சிதேசிடம் தர வில்லையாம் , சிதேசுவிற்கு கோபம் வந்து நகுலை அடித்து விட்டான்' என்றாள்.

என்ன ஒரு எண்ணம் சித்தேசுவிற்கு . தன் பென்சிலை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற சுதந்திரம் நகுலுக்கு உள்ளது என சித்தேசுவிற்கு தெரிய வேண்டாமா?

இது இன்றைய தலைமுறையின் வளர்ப்பு குறை பாட்டின் ஒரு சிறிய உதாரணம்.

வீட்டில் கணவன் மனைவியில் ஆரம்பித்து, நாட்டின் இராணுவ தளம் வரை அனைவரின் வெற்றியானது 'பிறரை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, உத்தரவு பிறப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும்' என்பதில் மட்டுமே அடங்கி உள்ளது. என்ன ஒரு அற்ப எண்ணம்.
 
ஒவ்வொருவரும் இதையே நினைத்தால் போராட்டம் தான் மிஞ்சும். தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையை கொண்டவர் தான் பிறரை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர எண்ணுவர்.


வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      


உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால், முதலில் நமக்கு நாமே  உத்தரவு பிறப்பித்துக் கொள்ள வேண்டும். இரவு படுக்கச் செல்லும் பொழுது , ' நாளை காலை 5 மணிக்கு எழுந்திரிக்க வேண்டும்' என உத்தரவு பிறப்பித்துக் கொள்ள வேண்டும் . ' நாளை இந்திந்த கடமைகளை செய்ய வேண்டும்' என உத்தரவு பிறப்பித்துக் கொள்ள வேண்டும் .

நாமும் முன்னேறுவோம். சமுதாயமும் முன்னேறும்.

நம்மில் எத்தனைப் பேரால் சரியாக அடுத்த நாள் காலை 5 மணிக்கு எழ இயலும். நம்மையே நம்மால் கட்டுப்பாட்டில் கொண்டு வர இயலாத பொழுது , பிறரை நம் கட்டுப் பாட்டில் கொண்டு வந்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என எண்ணுவது பேராசை.

இதை உணர்ந்து நம் மனதினை நம் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதில் நம் ஆற்றலை செலவிட்டால் நம் முன்னேற்றம் நம் கையில்.
 
 
 


   
மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக