புதன், 22 பிப்ரவரி, 2017

இனியும் வாய் வார்த்தை எடு படுமா? | வெற்றி

மனித குலத்திற்கு வார்த்தை வாக்கின் மேல் உள்ள நம்பிக்கை முழுதும் போய்விட்டது. நடப்பது என்னவோ இந்த நம்பிக்கை ஏற்படுத்தாத சூழ்நிலைகளே. இந்த நொடியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டு அடுத்த சில நிமிடங்களில் மனம் கூசாமல் அந்த நம்பிக்கையை உடைக்கும் வண்ணம் நடப்பது  தான் இக்கால பேஷன்.

ஒருவர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என எண்ணுகிறீர்களா? அவர்கள் செயல் என்ன சொல்கிறது என்பதனை மட்டும் கவனியுங்கள் . செயலில் சரியாக உள்ளார்களே என எண்ணி சிக்க வேண்டாம். ஒவ்வொரு செயலையுமே கண் கோத்தி பாம்பாக பார்க்க வேண்டிய சூழ்நிலை . என்ன செய்வது ? நல்ல மனம் கொண்டவரையும் இவர் நல்லவரா ? நல்லவரா ? என உரசி பார்க்க வேண்டிய கட்டாய சமுதாயம். 
அவ்வாறு உரசி பார்க்கும் பொழுது அந்த நல்ல மனம் படைத்தோரின்  மனம் கோணாமல் பார்ப்பதும் உறவை சீராக வைக்க மிக முக்கியமான ஒன்று.

வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      


வீடியோ கேம்ஸ்சை பார்த்தால் , பல நிலைகள் வரும். முதல் நிலையை விட அடுத்த நிலையில் எதிரிகளின் தாக்கம் அதிகமாக இருக்கும் . அதற்காக சோர்வடைந்தால் கேம்மை விட்டு வெளியேற வேண்டியது தான்.

அது போல தான் , நாம் முன்னேற வேண்டும் என துடிக்க துடிக்க,வெறும் வாய் வார்த்தை நம்பிக்கையை கொடுத்து காரியம் சாதிக்கும் மக்களை அணுக நேரிடும். துவண்டு விட கூடாது. உண்மையை பகுத்தறியும் திறனைக் கொண்டு தடைகளை அகற்ற வேண்டும். 

வாய் வார்த்தை மன்னர்களுக்கு நம் செயலின் மூலம் நாம் யார் என காட்டி விட்டு போய் கொண்டே இருப்போம். நம் முன்னேற்றம் நம் கையில்.
   
மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக