சனி, 11 பிப்ரவரி, 2017

நம் உடலை விட்டு உயிர் பிரிவது ஒரு நாள் நடக்க தானே செய்யும்? | வெற்றி

என்றோ ஒரு நாள் மரணம் உறுதி. அது என்று என்ற தேதி தான் நமக்கு தெரியாது. பின்பு எதற்கு வாழ்ந்து முடிப்பதர்க்குள் அத்தனை சுயநலம் ?

நாம் இறக்கும் தருணத்திலேயே, நம்மை சார்ந்த அனைத்தையும் எடுத்துக் கொண்டு செல்வதனைப் போல அத்தனை பதை பதைப்பு.


சிறு பிள்ளை தனமாகவே வாழ்ந்து பழக்கப் பட்டு விட்டது மனது. ஒரு உறவினர் வெளி நாட்டில் இருந்து ஐஸ் கிரீம்களை தன் உறவுகார குழந்தைகளுக்கு வாங்கி வந்து இருந்தார். அந்த   ஐஸ் கிரீம்களின் காலாவதி நாள் ஒரு வாரம் தான். 6 குழந்தைகளுக்கு 85 பாக்கெட்களை வாங்கி வந்து இருந்தார்.

அவற்றை மேஜை மீது வைத்து விட்டு எடுத்துக் கொள்ளுங்கள் என சொல்லி விட்டு சென்று விட்டார். அதில் ஒரு குழந்தை வலு கட்டாயமாக , அவசரமாக, காணாததை கண்டது போல, 50 பாக்கெட்களை அள்ளிக் கொண்டு ஓடி விட்டது. மீதி இருந்த பாக்கெட்களை 5 குழந்தைகளும் 7 பாக்கெட்களாக எடுத்துக் கொண்டன.


 

வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      


50 பாக்கெட்களை அள்ளிக் கொண்டு ஓடின அந்த குழந்தையால் தினம் நான்கு ஐஸ் கிரீம்களுக்கு மேல் சாப்பிட இயல வில்லை. மீதி 22 பாக்கெட்களும் யாருக்கும் பயன் இல்லாமல் குப்பைக்கே சென்று விட்டது.

ஒரு குழந்தையின் அறிவு இல்லா தனத்தால் அனைத்து குழந்தைகளும் இலாபத்தை இழந்தன. இதைப் போல் தான் , நமக்கு என்றுமே இறப்பில்லை என்ற மாயை எண்ணத்தில் வாழ்ந்து கொண்டு, சுயநலம் மிகுந்து, பிறர் நலம் கெடுக்கும் சூழலில் வாழ்க்கை மேற்கொள்கின்றனர் பலர். இதைப் போன்ற   சுயநல எண்ணத்தை தவிர்ப்போமே.

 
   
மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக