வியாழன், 30 மார்ச், 2017

பிரச்சனைகளால் உங்கள் தலையே வெடித்து விடும் போல் உள்ளதா? | வெற்றி

பிரச்சனை இல்லாமல் ஒருவர் இவ்வுலகில் உள்ளார் என்றால் , அது பிணமாக தான் இருக்க இயலும். பிரச்னைகளை இரண்டு வகையாக பார்க்கும் பொழுது, அவை நமக்கு தலையே வெடிக்கும் அளவு பாரமாக தெரியும் .

ஒன்று: பிரச்சனையை நம் மனம் எவ்வாறு எடுத்துக் கொள்கிறது என்பது.


இரண்டு: வெவ்வேறு சமயங்களில் முடிக்க வேண்டிய அனைத்துப் பிரச்சனைகளையும் ஒரே சமயத்தில் பார்ப்பது.

செவ்வாய், 14 மார்ச், 2017

ஊமைக்கு நியாயம் கிடைக்குமா ? | வெற்றி

முள்ளின் மேல் கால் வைத்து விட்டு முள் குத்தி விட்டது என்று சொல்வதும் , கல்லில் நாமே சென்று இடித்துக் கொண்டு கல் இடித்து விட்டது என்று சொல்வதும் நம் பழக்கமாக இருக்கும் வரை , நிதர்சனமான உண்மை என்ன என மனம் ஏற்க தயாராகுமா என்பது சந்தேகமே.

எத்தனை தலை முறைகளைக் கடந்தாலும் மனித குலத்தின் இந்த மாதிரியான எண்ணங்களில் மாற்றங்கள் ஏற்படாமல் , தனி மனித முன்னேற்றத்தை  எவ்வாறு எதிர் பார்ப்பது.

சனி, 11 மார்ச், 2017

பிறர் உங்களை மதிக்க வில்லையே என்ற வருத்தமா? | வெற்றி

உங்களை பிறர் மதிக்க வில்லை எனில் , அவர்களுக்கு உங்களிடம் காரியம் இல்லை என்று தான் அர்த்தம். எவரும் இவ்வுலகில் உங்களை மதிப்பதற்காக பிறக்கவில்லை.
தான் வாழ என்ன கிடைக்கும் என்பதற்காகவே, பிறரிடம் அனைத்து உயிரினமும் தொடர்பில் உள்ளது.

வியாழன், 9 மார்ச், 2017

கடவுள் இருக்கிறாரா? | வெற்றி

தெரியவில்லை.கண்களால் கண்டது இல்லை. சரி, அப்பொழுது காண இயலாதவர் தான் கடவுளா ? இருக்கலாம். 'உணர்வது தான் கடவுள்' என பெரியவர்கள் கூறி கேள்விப் பட்டு இருக்கிறேன். எவ்வகையான உணர்வு அது? காற்றினை கண்களால் காண இயலாது . உணர்கின்றோம். அவ்வகையான ஒருவித உணர்வு என்கிறார்கள் !

செவ்வாய், 7 மார்ச், 2017

நல்லவனாக முன்னேற முடியுமா? | வெற்றி

கண்டிப்பாக இல்லை. நல்லவனாக ஒரு அடி முன்னே நடந்தால் பல அடிகள் பின்னோக்கி தள்ளப் படுவோம் . இன்றைய உலக சூழ்நிலை இதை தான் நல்லவனுக்கு பரிசாக தரும் .

அப்பொழுது நல்லவனாக முன்னேற முடியவே முடியாதா ? எல்லாம் ஏட்டில் மட்டும் தானா ? அதுவும் கண்டிப்பாக இல்லை. நல்லவன் வல்லவனாக மாறும் பொழுது முன்னேற்றம் கண்டிப்பாக வாழ்வில் உண்டு.
சனி, 4 மார்ச், 2017

இந்த நொடியை சரியாக வாழ்ந்தால்...? | வெற்றி

நம் பலரின் தவிப்பு நாளை நம் வாழ்க்கை எவ்வாறு இருக்குமோ என்று. சிலரின் தவிப்பு நேற்று இவ்வாறு நடந்து விட்டதே என்று. நேற்றைய நொடிகளும், நாளைய நொடிகளும் நம் கைகளில் இல்லை என்பதை முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும்.

நேற்றைய நொடிகளில் இருந்து அனுபவத்தை எடுத்துக் கொள்ளலாம். நாளைய நொடிகளை சரியாக அமைத்திட இன்றைய நொடிகளை சரியாக வாழ்ந்தாக வேண்டும்.

புதன், 1 மார்ச், 2017

அமிர்தமே அளவிற்கு மீறும் பொழுது நஞ்சாகிறது , அப்பொழுது குழந்தைகளிடம் காட்டும் அன்பானது ? | வெற்றி

பெற்றெடுத்த தாய் , தந்தையருக்கு இல்லாத உரிமையும் அன்பும் ஒரு குழந்தையின் மேல் யாருக்கு இருக்க முடியும்? ஆனால் , அந்த அன்பே அளவிற்கு மீறினால், அது அந்த குழந்தைக்கே அல்லவா நஞ்சாகிறது.

நாம் வளர்த்தவர்கள் , நல்லது எது கெட்டது எது என பகுத்தறிய இயலும் . ஆனால் , குழந்தைகள் அவ்வாறு இல்லை. அன்பாக எதை கொடுத்தாலும் பெறும் வயதது. என் குழந்தை நடந்தால் அதன் கால் வலிக்கும் என நடக்கும் வயதில் அதை தூக்கி கொள்கின்றோம்.