வியாழன், 9 மார்ச், 2017

கடவுள் இருக்கிறாரா? | வெற்றி

தெரியவில்லை.கண்களால் கண்டது இல்லை. சரி, அப்பொழுது காண இயலாதவர் தான் கடவுளா ? இருக்கலாம். 'உணர்வது தான் கடவுள்' என பெரியவர்கள் கூறி கேள்விப் பட்டு இருக்கிறேன். எவ்வகையான உணர்வு அது? காற்றினை கண்களால் காண இயலாது . உணர்கின்றோம். அவ்வகையான ஒருவித உணர்வு என்கிறார்கள் !


அப்படியானால் , பிறந்தது முதல் இந்நாள் வரை எத்தருணத்திலாவது, 'ஆகா , கடவுள் இருக்கிறார்' என்று உள்ளுணர்வு கூறியதாக உணர்ந்துள்ளோமா ?  ஆம் எனில் , அந்த உணர்வு தான் கடவுள் உணர்வு என எடுத்துக் கொள்ளலாமா ?

நாம் கடின சம்பவங்களுக்கு சூழ்நிலை வசத்தால் உட்படுத்தப்பட்டு இருக்கும் பொழுது , அன்னிசை செயல் போல , நமக்கு ஆதரவாக , சாதகமாக ஒரு நொடி தப்பிய கால கணக்கில், நம்மை மீறி நமக்கு நல்லது நடந்திருக்கும். ஆழமாக பார்த்தால், உள்மனம் என்ன விரும்பியதோ அதுவே , எதிர் பாராத விதத்தில் கிடைத்திருக்கும் . மனதிற்கு, கடவுள் இருக்கிறார் என்ற உணர்வை அத்தருணமே  ஏற்படுத்தி இருக்கும். 

ஒவ்வொரு மனிதனுக்கும் சுயநினைவான சாதாரண தருணங்களில், தன் ஆழ் மனதை அடையும் சக்தி ஒரு கட்டத்தோடு முடிந்து விடுகின்றது. ஆனால், சில சந்தர்ப்பங்களில் , அன்னிசையாக, நம் ஆழ் மனதையும்  தாண்டி தொடர்புக் கொண்டு 'உணர்வு பூர்வமாக வேண்டும்' தருணம் நம்மை அறியாமல் ஏற்படுகிறது. நினைத்தது கிடைக்கிறது. அத்தருணத்தில், கடவுள் இருப்பதாக உணர்கிறோம். 

இப்பொழுது கூறுங்கள். கடவுள் இருக்கிறாரா? ஒவ்வொரு மனிதனுள்ளும் ஆழ்மனதை தாண்டிய ஒரு உணர்வாக கடவுள் இருக்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாமா? அந்த உணர்விற்கு மதிப்பளிக்கும் பொழுது நம்மை காக்கும் சக்தியாக உள்ளார் என எண்ணலாமா?

பிரபு , மகேஷ் இருவரும் சிறு வயது முதலே உற்ற நண்பர்கள். இருவரும் ஒரு நாள் மலை ஏற்றத்திர்க்கு சென்று இருந்தனர். அப்பொழுது , எதிர்பாரா விதமாக, ஒரு பெரிய பள்ளத்தில் விழுந்து விட்டனர். இருட்டிய நேரம். இருவரையும் பயம் தொற்றிக் கொண்டது. பிரபு அவ்வளவு தான் வாழ்வே முடிந்து விட்டது என அழுதான். மகேஷ் தைரியசாலி. பிரபுவை 'அழ வேண்டாம் , எப்படியும் தப்பிவிடலாம்' என ஆறுதல் கூறினான். 
 

வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      


பொழுது விடிந்தது. பள்ளத்தின் ஆழத்தை பார்த்து பிரபுவிற்கு மயக்கமே வந்து விட்டது. ஆனால், மகேஷ் அசர வில்லை. அவன் உள் மனது எப்படியும் தப்பி விடலாம் என நம்பியது. அவனையே அறியாமல் , ஆழ்மனதையும் தாண்டிய உணர்விற்கு மேல் 'தப்ப வேண்டும்' என்ற எண்ணத்தில் சென்று விட்டான். அந்த உணர்வு அவனைக் காக்க , சிறு சிறு பாறைகளால் ஆன படிகளையும் , செடிகளின் தோரணங்களையும் அவன் கண்களுக்கு காட்டியது. 

அந்த வாய்ப்பை பயன் படுத்தி அவன் பள்ளத்தில் இருந்து வெளியே வந்து விட்டான். பின்பு , அவசரமாக ஊரினுள் ஓடி சென்று, தக்க ஏற்பாடுகளை செய்து தன் நண்பன் பிரபுவையும் காப்பாற்றினான்.

மகேஷையும் பிரபுவையும் கடவுள் தான் காப்பாற்றினார் என கூறினர் ஊர்காரர்கள். அவர்களின் பெற்றோர் 'ஆகா, கடவுள் இருக்கிறார்' என்றனர்.  இங்கே , இருவரையும் காப்பாற்றியது , மகேஷின் ஆழ்மனதை தாண்டிய அன்னிசை உணர்வில் இருந்த நம்பிக்கை . அந்த உணர்வின் மறு பெயர் ' கடவுள் ' எனவும் பெயரிடலாம். எனவே, கடவுள் இருக்கிறார் என நம்புவோம். அதனை நம்முள் தேடுவோம்.
   
மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக