செவ்வாய், 7 மார்ச், 2017

நல்லவனாக முன்னேற முடியுமா? | வெற்றி

கண்டிப்பாக இல்லை. நல்லவனாக ஒரு அடி முன்னே நடந்தால் பல அடிகள் பின்னோக்கி தள்ளப் படுவோம் . இன்றைய உலக சூழ்நிலை இதை தான் நல்லவனுக்கு பரிசாக தரும் .

அப்பொழுது நல்லவனாக முன்னேற முடியவே முடியாதா ? எல்லாம் ஏட்டில் மட்டும் தானா ? அதுவும் கண்டிப்பாக இல்லை. நல்லவன் வல்லவனாக மாறும் பொழுது முன்னேற்றம் கண்டிப்பாக வாழ்வில் உண்டு.

மன திருப்தியுடன் முன்னேறும் வாய்ப்பு கண்டிப்பாக நல்லவனுக்கு மட்டுமே அமையும் பரிசு. சுவைப்பவனுக்கே அதன் அருமை தெரியும்.

முரளி டீக்கடை முதலாளி . நியாயமான மனிதர். தன் வல்லமை தன்மையால் சிறுது சிறிதாக சேர்த்த சேமிப்பில் அவரால் ஒரு சிறு ஹோட்டலை தன் ஊரில் வைக்க முடிந்தது. இவரின் கலப்படம் இல்லா சுகாதாரமான உணவை யாரால் தவிர்த்துச் செல்ல இயலும்.


முன்னேற்றம் சிறிதளவு எனினும், அடைந்த திருப்தியோ, கண்டிப்பாக, மோசமான கலப்பட உணவில் சம்பாதித்த ஐந்து நட்சத்திர முதலாளிக்கு வராது. முரளி வெறும் நல்லவனாக மட்டும் இருந்திருந்தால், அவருக்கு ஏமாளி என்று பட்டம் சூ
ட்டி , இலவச டீ குடித்தே ஊர் மக்கள் அனைவரும் அவரின் தொழிலுக்கு நஷ்ட்டத்தை ஏற்படுத்தி இருப்பர். 


வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      


நல்லவன் அடுத்தவர் மேல் கருணை கொண்டு தன்னை இழப்பான். நல்ல வல்லவன் தன்னை இழக்காமல் அடுத்தவர் மேல் கருணை கொள்வான். வாழ்வில் முன்னேறுவோம் , நல்ல வல்லவனாக.  

   
மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக