புதன், 1 மார்ச், 2017

அமிர்தமே அளவிற்கு மீறும் பொழுது நஞ்சாகிறது , அப்பொழுது குழந்தைகளிடம் காட்டும் அன்பானது ? | வெற்றி

பெற்றெடுத்த தாய் , தந்தையருக்கு இல்லாத உரிமையும் அன்பும் ஒரு குழந்தையின் மேல் யாருக்கு இருக்க முடியும்? ஆனால் , அந்த அன்பே அளவிற்கு மீறினால், அது அந்த குழந்தைக்கே அல்லவா நஞ்சாகிறது.

நாம் வளர்த்தவர்கள் , நல்லது எது கெட்டது எது என பகுத்தறிய இயலும் . ஆனால் , குழந்தைகள் அவ்வாறு இல்லை. அன்பாக எதை கொடுத்தாலும் பெறும் வயதது. என் குழந்தை நடந்தால் அதன் கால் வலிக்கும் என நடக்கும் வயதில் அதை தூக்கி கொள்கின்றோம்.அதற்கு அந்தந்த வயதில் செய்ய வேண்டிய வேலையை செய்ய விடாமல் , சொகுசாக வளர்க்கிறேன் , அன்பாக வளர்க்கிறேன்  என அனைத்து வேலை பளுவையும் நம் தோள் மீது போட்டு வளர்க்கின்றோம்.

கடைசியாக , பட்டாம் பூச்சியின் இறக்கைகளை உடைத்து விட்டு பர , பர என கூறுவது போல , பிள்ளைகள் வளர்த்தவுடன், அனைத்தையும் நீயே செய்துக் கொள் என அனைத்து பொறுப்புகளையும் ஒரே நாளில் அவர்கள் தலையில் தூக்கி வைத்து விட்டு, வளர்ந்த பிள்ளைகளுக்கு பொறுப்பு தானாக வந்து விட வேண்டியது தானே ! என்கின்றோம் , இது சரியா?  இவ்வாறு வளர்க்கப் பட்ட குழந்தைகள் வளர்ந்து படும் துயரம் எண்ண இயலாதது. சிறு வயது முதல் சிறுக சிறுக பட்டு பழக வேண்டிய துயரத்தை ஒரே நாளில் பட்டு துடித்து போகும்.


வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      


உண்மையான பிள்ளை பாசம் என்பது, பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும் பொழுது நாம் இந்த உலகில் இல்லை என்றாலும் , அவர்கள் இவ்வுலகில் செளவ்கரியமாக பிழைத்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை ஏற்படும் வண்ணம் சிறுவயது முதலே வயதிற்கு ஏற்ற பொறுப்புகளை கொடுத்து நம்மை சார்ந்து இல்லா வண்ணம் வளர்ப்பது. 

நம் பாசத்தை நம் குழந்தையின் திறமைகளை வளர்க்க பயன் படுத்துவோம்.

 
   
மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக