வியாழன், 30 மார்ச், 2017

பிரச்சனைகளால் உங்கள் தலையே வெடித்து விடும் போல் உள்ளதா? | வெற்றி

பிரச்சனை இல்லாமல் ஒருவர் இவ்வுலகில் உள்ளார் என்றால் , அது பிணமாக தான் இருக்க இயலும். பிரச்னைகளை இரண்டு வகையாக பார்க்கும் பொழுது, அவை நமக்கு தலையே வெடிக்கும் அளவு பாரமாக தெரியும் .

ஒன்று: பிரச்சனையை நம் மனம் எவ்வாறு எடுத்துக் கொள்கிறது என்பது.


இரண்டு: வெவ்வேறு சமயங்களில் முடிக்க வேண்டிய அனைத்துப் பிரச்சனைகளையும் ஒரே சமயத்தில் பார்ப்பது.

முதலாவதை எண்ணுவோம். நிர்மலாவின் மகன் கணிதத்தில் 100 க்கு 95 மதிப்பெண்கள்  வாங்கி உள்ளான். தன் மகன் 5 மார்க்குகள் குறைவாக வாங்கி உள்ளானே , என்ன செய்வது என புரியாமல் நிர்மலா தவித்தார். அவர் வீட்டின் அருகில் உள்ள கல்பனாவின் மகன் 100 க்கு 70 மதிப்பெண்கள் வாங்கி உள்ளார். கல்பனாவின் உள்ளம் சந்தோசத்தில் துள்ளியது. தன் மகன் பாஸ் செய்து விட்டான் பரவாயில்லை என்று அவருக்கு.  இதை தான், பிரச்சனைகளை மனம் எவ்வாறு பார்க்கிறது என்பதனைப் பொறுத்து மன அழுத்தம் மாறுபடும் என்கின்றோம்.

எனவே, எந்த சூழ்நிலையாக இருந்தாலும் , பதட்டத்தால் பயன் இல்லை. மனம் பிரச்னைகளை லகுவாக பார்க்கும் பொழுது, தீர்வுகள் எளிதாக பிறக்கும்.


வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      


இப்பொழுது இரண்டாவதை எண்ணுவோம். ஒவ்வொரு பிரச்சனைக்கும் வெவ்வேறு கால கட்டத்தில் தீர்வு கண்டால் போதும் என்று இருக்கும். ஆனால், அனைத்து பிரச்சனைகளையும் ஒரே தருணத்தில் பார்க்கும் பொழுது , பூதாகரணமாக மனம் அணுகும். ஒன்றும் இல்லா விஷயம் கூட பெரியதாக மனம் எண்ணி துடிக்கும். சிலர் அனைத்து பிரச்சனைகளும் ஒரே தருணத்தில் எண்ணி எந்த பிரச்சனையையும் அணுகாமல் விட்டு விடுவர்.

எனவே, எந்த பிரச்சனையை  எப்போது முடிக்க வேண்டும் என்ற கால அட்டவணையை போட்டு விட்டு , ஒரு சமயத்தில் ஒன்றில் தான் மனதை பொருத்த வேண்டும். அப்பொழுது எப்படியாப்பட்ட பிரச்சனையும் எளிதாக முடிக்க இயலும் என்ற நம்பிக்கை பிறக்கும். தலை வெடித்து விடும் போல உள்ளதே என்ற எண்ணம் வராது.
 
   
மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக