செவ்வாய், 14 மார்ச், 2017

ஊமைக்கு நியாயம் கிடைக்குமா ? | வெற்றி

முள்ளின் மேல் கால் வைத்து விட்டு முள் குத்தி விட்டது என்று சொல்வதும் , கல்லில் நாமே சென்று இடித்துக் கொண்டு கல் இடித்து விட்டது என்று சொல்வதும் நம் பழக்கமாக இருக்கும் வரை , நிதர்சனமான உண்மை என்ன என மனம் ஏற்க தயாராகுமா என்பது சந்தேகமே.

எத்தனை தலை முறைகளைக் கடந்தாலும் மனித குலத்தின் இந்த மாதிரியான எண்ணங்களில் மாற்றங்கள் ஏற்படாமல் , தனி மனித முன்னேற்றத்தை  எவ்வாறு எதிர் பார்ப்பது.


உலக மக்களில் பலரின் குணாதிசயம் தன் தவறினை மறைப்பதற்காக அடுத்தவரை முந்திக்கொண்டு குறைக் கூறுவதாகவே உள்ளது. அவ்வாறு முந்தி அடித்துக் கொண்டு குறை கூறினால், தான் நியாயஸ்தன் என பிறர் நம்புவார்கள் என நினைத்து , எதிராளியிடம் உள்ள நட்புறவை முழுதும் இழக்கின்றனர். தன்னால் இயல வில்லை என உண்மையை கூறினாலாவது , கருத்து வேற்றுமை அகல ஏதோ வாய்ப்புள்ளது.

ஆனால், எதிராளி ஊமை தானே , அவனால் என்ன செய்து விட முடியும் என்ற கணக்கு போட்டு, தன் தலையில் தானே மண்ணை வாரி இரைத்துக் கொள்கின்றனர் பலர்.


வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      எதிராளி ஊமையானால் என்ன? ஊமைக்கு நியாயம் தேவை இல்லை. இழுக்கு பேச்சு கொண்டவர் தன்னாலேயே தன் நிலையினை சீர்குலைத்துக் கொண்டு ஊமைக்கு நியாயத்தை இயற்கையாகவே வழங்கி விடுவார்.

இதனை புரிந்துக்  கொண்டு , மேன்மையான எண்ண அலைகளை மட்டும் மனதில் பதிய வைப்போம். பிறருக்காக அல்ல , நமக்காக.
 

 
 
 

மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக