புதன், 26 ஏப்ரல், 2017

ஒரு தீப்பொறி போதுமே ! | வெற்றி

சந்தேகம் என்ற ஒரு தீப்பொறி போதுமே மனம் நிம்மதி இழப்பதர்க்கு. தேவையில்லா சந்தேகம் பல குடும்ப உறவுகளை பிரித்துள்ளது.

மாமியார், நாத்தனார்  என்றாலே மருமகளுக்கு எதிரானவர்கள் என்ற சந்தேகம். கணவன் என்றாலே தன் தாய் சொல்வதை தான் கேட்பார் என்ற சந்தேகம்.மருமகள், மருமகன் என்றாலே தன் மகன், மகளை தன்னிடம் இருந்துப் பிரித்து விடுவார்கள் என்ற சந்தேகம். மருமகள் சுதந்திரமாக செயல் பட்டால், தன்னை மதிப்பதில்லை என்ற மாமனார் , மாமியாரின் சந்தேகம்.தேன் ஒழுக பேசினாலே காரியத்திற்காக பேசுகிறான் என்ற சந்தேகம்.

விதி விலக்குகள் உலகில் இருக்காதா என்ன ? சந்தேகப் பட்டு பட்டே அவ்வாறு இல்லாதவரையும், மோசமானவராக உருவக படுத்தி படுத்தியே வாழ்க்கை உறவு முறைகளை தாழ்த்தி கொள்கின்றனர்.


நல்ல உள்ளங்களும் , உறவுகளும்  இருந்தும் பயனற்று போய் விடுகிறது. ஒவ்வொரு விஷயத்தையும் பார்க்க பல கோணங்கள் உள்ளன. சந்தேக எண்ணதோடு, ஒருவர் இந்த நோக்கத்தோடு  தான் அணுகுவார் என நினைக்கும் பொழுது , அந்த விஷயத்தை செய்யும் மனிதர் நல்லதை நினைத்து செய்து இருந்தாலும் , தவறானதாகவே படும். இவ்வாறே பல நல்ல உறவுகளும் முறிந்து விடுகின்றன.வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      


நமக்கு என்ற பாதுகாப்பு அரணை 'சந்தேகம் என்ற குணம்'  ஏற்படுத்தும் என்பதில் மாற்று கருத்து இல்லை.ஆனால், சந்தேகத்தை சந்தேகமாக மட்டும் பார்க்காமல், உண்மையாகவே நம்பி விடுவது தான் இங்குள்ள பிரச்சனை.  

   
மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக