வியாழன், 13 ஏப்ரல், 2017

உங்கள் ஏழ்மைக்கு கடவுள் காரணமா? | வெற்றி

ஓர் கிராமத்தில் ஒரு ஏழை நெசவாளி வாழ்ந்து வந்தான். அதே கிராமத்தில் இருந்த மிராசுதாரரை நித்தம் நினைத்து , ' இந்த கடவுளுக்கு கருணை இல்லை. அந்த மிராசுதாரருக்கு மட்டும் அனைத்து செல்வங்களும் கொடுத்து உள்ளார். என்னை ஏழ்மையிலேயே வைத்து உள்ளார்', என புலம்பி கொண்டே இருந்தான்.


ஒரு நாள் அவன் உறக்கத்தில் கடவுள் தோன்றினார். ' அடேய் முட்டாள்! உன் ஏழ்மைக்கும் அவன் வசதிக்கும் நான் காரணம் இல்லை. இன்று முதல் அந்த மிராசுதாரரை நினைக்காதே. உனக்குள் அனைத்து தகுதிகளும் உண்டு என நினை. உன் தொழிலை முழுமையாக நேசி' , என கூறியவுடன் , நெசவாளிக்கு விழிப்பு வந்தது.


வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      


'அடடா, கடவுளே கூறி விட்டார். தெய்வ குற்றம் ஆகி விடும்', என அன்று முதல் கடவுள் கட்டளை படி நடந்தான். அந்த கிராமத்தில் இவன் ஒருவன் தான் நெசவாளி . இவனின் தொழில் பக்தியை பார்த்து மிராசுதாரர் உட்பட அனைவரும் இவனிடமே, விழாக்களுக்கும் அனைத்து விசேஷங்களுக்கும் துணிமணிகள் வாங்கிச் சென்றனர். ஏழை நெசவாளி செல்வ செழிப்புள்ள நெசவாளி ஆனான்.

இதே போல் தான், நம்மில் பலர் நம் தாழ்மைக்கு அடுத்தவர் காரணம் என புலம்புவர். சமுதாயத்தை குற்றம் சாட்டுவர். உன்னை கவனி. உன் எண்ணத்தை கவனி.
 
 
 மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக