செவ்வாய், 9 மே, 2017

படித்த படிப்புக்கான வேலை இதோ ! | வெற்றி

நாம் எதற்காக படிக்கிறோம்?  குழந்தை பருவத்தில் இருந்து நமக்கு என்று உள்ள தனி திறமைகளை பள்ளிக்கோ , கல்லூரிக்கோ செல்வதனால் பயிற்சியின் மூலம் வளர்த்துக் கொள்ளலாம், படிப்பு அதற்கு உதவும் என படிக்கிறோம். ஆனால் திரிந்து போன சூழ்நிலை?

நன்றாக படி, நல்ல வேலைக்குச் செல்வாய், கை நிறைய சம்பாதிப்பாய், என்ற பெரியவர்களின் அறிவுரைகளைக் கேட்டு கஷ்டப்பட்டு படிக்கும் நமக்கு, , வளர்ந்தப் பின் திறமைகளை வளர்க்க படித்தோம் என்பது மாறிப் போய், படித்தப் படிப்புக்கு வேலை கிடைக்க வில்லையே என தோன்றி விடுகிறது.
 

வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      


சமுதாய அறியாமையே இதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. அனைவரின் திறமைகளும் ஒரே துறையை நோக்கியதாக மட்டும் இருக்க இயலுமா என்ன? ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டும் வருமானம் அதிகம். ஆனால் , அந்த துறையில் தனித் திறமை இல்லாதவன், அத்துறையை தேர்தெடுத்துப் படித்தால் , வேலை வாய்ப்பு அமைந்திடுமா ?

திறமைக்கான வேலை வாய்ப்பு என்றும் உலகில் உண்டு, இந்தப் படிப்பை படித்து விட்டோம் என்பதற்காக வேலை வாய்ப்பு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நமக்கு என்று உள்ள திறமையை வளர்க்கவே படிக்கிறோம் என்பதனை உணர்ந்து , படித்தப் படிப்பே திறமையை வளர்க்க தான் என்பதனை உணர்ந்து , படிப்புக்கு வேலை தேடாமல் , திறமைக்கு வேலை தேடுவோம். வேலை என்றும் உண்டு. 

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக