சனி, 27 மே, 2017

உண்மை என்றும் ஜொலிப்பது இல்லை! | வெற்றி

பல சமயங்களில் உண்மை கசப்பான உணர்வையே தருகிறது. பொய்மை அலங்கரித்துக் கொண்டு அனைவரையும் ஈர்க்கும் திறனுடன் உள்ளது.  மாலனுக்கு வாரம் இரு முறை ஏனும் பிஸ்சா வேண்டும். கடைக்கு சென்றால் லேஸ் , பிங்கர் சிப்ஸ் , பாப் கார்ன் , கோக் என அனைத்து நாவிற்கு சுவையான  உணவுகளும் வேண்டும்.


சிறு வயது முதலே அவன் கண்களில் பட்ட சுவை மிக்க உணவுகள் இவைதான். அவனின் தாத்தா எத்தனையோ முறை  'இவ்வகை உணவுகள் நோய்களை உண்டு பண்ணும். சத்துள்ள ராகி தோசை, கம்பு, கடலை உருண்டை, இளநீர், மோர் போன்றவற்றை உண்ணு' என்று கூறி விட்டார். அவனின் பெற்றோரிடமும் கூறியாற்று. எந்த பயனும் இல்லை.

நாட்கள் கடந்தன. மாலன் பெரியவன் ஆனான். 20 வயது இருக்கும். ஒரு நாள் காலேஜ் வகுப்பில் மயங்கி விழுந்து விட்டான். டாக்டர் பெற்றோரை வர வழைத்து விட்டார். மாலனுக்கு ரத்த கொதிப்பு, நீரழிவு நோய் , கொலஸ்ட்ரால் என சரி செய்ய இயலா பிரச்சனைகள் உடலில் உள்ளன. இனி உணவில் வெகு கவனமாக இருக்க வேண்டும். தினமும் தவறாமல் மாத்திரை உண்ண வேண்டும். தவறினால் உயிருக்கு ஆபத்து என்றார். அவன் வயதிற்கு  இது தேவையா? உடனே , அவன் தாத்தா முகம் தான் அனைவர் எண்ணத்திற்கும் வந்தது.
  
 

வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      


கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் பயன் தருமா என்ன ? பொய்மையில் உள்ள ஜொலிப்பை எண்ணி மயங்கினால் , உண்மை கசக்க தானே செய்யும்.

   
மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக