புதன், 31 மே, 2017

முயற்சி திருவினை ஆக்குமா ? | வெற்றி

எறும்பு ஊற கல்லும் தேய்கிறதே ! முயற்சியில் நல்லது என்ன ! , கெட்டது என்ன ! சரியான பாதையில் முயற்சி உள்ளதா என்பதே முக்கியமாக உள்ளது. முயற்சி செய்கிறேன் என இரு கைகளையும் அசைத்து கொண்டே இருந்தால் பறந்து விடுவோமா என்ன? அல்லது பறக்க இயலாது என்பதற்காக வானுர்தியை கண்டறியாமல் விட்டோமா என்ன ?  


குறிக்கோள் ஒன்றாக இருக்கும். அடையும் வழிகள் பல உள்ளன . ஒவ்வொரு வழிக்கும் முயற்சி தேவை. எந்த முயற்சி காலத்திற்கு ஏற்றது, கால விரையம் அற்றது ? என்பதல்லவா முக்கியம். கடவுளின் மேல் பாரத்தை போட்டு விட்டு எதுவும் செய்யாமல் அமர்ந்தால் என்ன ஆவது குறிக்கோள்? 

மோட்டுவிற்கும் சோட்டுவிற்கும் ஒரே குறிக்கோள் - தன் அம்மாவை லட்டு செய்ய வைக்க வேண்டும் என்பது. அம்மாவிற்கோ மிக்க வேலை பளு. இதில் எங்கே லட்டு செய்ய? மோட்டு தன் அம்மாவை லட்டு வேண்டும் வேண்டும் என நச்சரித்துக் கொண்டே இருந்தான். பளார் என அவன் கன்னத்தில் அரை விழுந்தது தான் மிச்சம். அவன் கன்னம் லட்டு வடிவில் வீங்கி விட்டது. இதனை பார்த்து கொண்டு இருந்த சோட்டு, யோசித்தான் . லட்டு வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.  
 

வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      


அதே சமயம் அம்மாவை சந்தோசமாக லட்டு செய்ய வைக்க வேண்டும். எவ்வாறு? தன் அம்மாவிடம் ஓடி சென்றான் . ' அம்மா ! அதிக வேலை பளுவுடன் உள்ளீர்கள் போல் உள்ளதே? நான் உங்களுக்கு உதவுகிறேன் ' என்றான். அம்மாவிற்கோ சந்தோசம் தாங்க முடியவில்லை. தன் பாரம் சுமக்க இவன் ஆவது உள்ளானே என , அவன் வயதிற்கு ஏற்ற வேலைகளை கொடுத்தாள். அம்மாவின் வேலை பளுவும் குறைந்தது. அம்மா மகிழ்ச்சியில் என்ன பரிசு வேண்டும் என கேட்டாள் . சோட்டுவோ 'லட்டு' வேண்டும் என்றான். அவளும் சந்தோசமாக மோட்டுவிற்கும் சோட்டுவிற்கும் லட்டு செய்து கொடுத்தாள். 

மோட்டு செய்ததும் முயற்சி தான். சோட்டு செய்ததும் முயற்சி தான். சரியான முயற்சியே இங்கு திருவினை ஆக்கியது. அப்பொழுது உங்கள் முயற்சி எவ்வாறு இருக்க போகிறது? 

   
மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக