புதன், 24 மே, 2017

தியாகம் சுவாராஸ்யமானதா? | வெற்றி

கடமையை நிறைவேற்றும் பொழுது அதில் தியாகமும் அடங்கி இருக்கும். தியாகத்தை பெறுபவரின் மன ஓட்டம் அதன் சுவாரசியத்தை நிர்ணயிக்கின்றது. 

குரங்கின் கையில் கிடைத்த பூமாலையைப் போல, தவறான ஆளால் பெறப்படும் தியாகம் கொடுப்பவரை ஏமாளியாக உருவகப்படுத்துகிறது.


வீட்டில் இருந்து பென்சில் எடுத்து வரவில்லை. நண்பனிடம் கெஞ்சினால் , அவனிடம் உள்ள ஒரே பென்சிலும் ஓசியில் கிடைக்கும். மாறி மாறி எழுதுவோம். இங்கே நண்பன் தியாகியா அல்லது ஏமாளியா ?

தியாகத்தில் உள்ள சுவாரசியம் என்றும் மறைவது இல்லை. தாய் தன் சிறு குழந்தைக்காக தினமும் தூக்கம் இழக்கிறாள் . தாயின் கடமையில் தியாகம் கலந்து உள்ளது. இந்த தியாகம் தாயின் பார்வையில்  சுவாராஸ்யம் தான். தியாகம்,  பாரமாக பார்க்க படாத வரை சுவாராஸ்யமானதாக தான் இருக்கும்.

தன் தங்கையின் திருமணம் சரியாக நடைப்பெற வேண்டும் என்பதற்காக , தன் திருமணத்தையே தள்ளிப் போட்டு, வயதான, அண்ணன்மார்களும் இவ்வுலகில் உண்டு. அவ்வாறு தியாகம் செய்யும் உயிருக்காக தியாகம் பெறும் உயிர் காலம் முழுதும் உணர்ந்து தக்கவாறு இருக்கும் போது தான் சுவாரசியத்தின் தன்மை கூடுகிறது. 
  
தன் சுகம் விட்டொழித்து பிறருக்காக வாழ்பவர் தியாகியாகிறார். எந்த கடமையும் தியாகம் இல்லாமல் நிறைவேறுவதில்லை. அதே சமயம் , தியாகம் செய்திட கடமை தேவைப்படுவதும்  இல்லை.

அனைத்து உறவு முறைகளிலும் கடமை கண்டிப்பாக உண்டு. எவ்வளவு தியாகம் செய்து தன் கடமையை நிறைவேற்ற தயாராக உள்ளோம் என்பது கவனிக்க பட வேண்டிய ஒன்று. கடமைகளை நிறைவேற்றும் பொழுது தான் ஏமாளியாக பார்க்கப் படுகிறோம் என எண்ணி கடமைகளை நிறைவேற்றாதவர்களும் உண்டு. பெறுபவரோ , கொடுப்பவரோ , ஒருவர் தடம் புரண்டாலும் தியாகம் சுவாரசியம் இழந்து விடுகிறது.

அதற்கு சமுதாயத்தில் ஒரு சரியான உதாரண உறவு முறை , பெற்றோர் பிள்ளைகள் உறவு முறை . சராசரியாக பெரும்பான்மையான பெற்றோர்கள் சிறிதோ பெரிதோ தியாகங்களை செய்து பிள்ளைகளை வளர்க்கின்றனர். தன் கடமைகளை தன் பிள்ளைகள் திருமணம் முடியும் வரை நிறைவேற்றுகின்றனர். 

தன் பிள்ளைகள் திருமணம் முடியும் வரை தான்,  செய்யும் தியாகங்களில் சுவாரிஸ்யத்தை பார்க்கின்றனர். அப்பொழுது கடமைகள் பெற்றோருக்கு பாரமாக தெரிவது இல்லை.

ஒரு பிள்ளையை பெற்றெடுக்கும் பொழுதே , அந்த பிள்ளை இறக்கும் வரை பெற்றோரின் பொறுப்பு , கடமைகள் உள்ளன. ஆனால், அப்பிள்ளையின் திருமணத்தின் பொழுது , அத்தோடு பொறுப்பு முடிந்தது என்றோ , பொறுப்பு குறைந்து விட்டது என்றோ தப்பு கணக்கு போட்டு விடுகின்றனர் பெற்றோர்  . சொல்லப் போனால் , பொறுப்பு கூட தானே செய்யும். பிள்ளைகளுக்கு ஆற்றும் கடமை , பிள்ளைகளின் குடும்பத்திற்கு ஆற்றும் கடமையாக மாறுகிறது. 
 

வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      


புது மறுமகளையோ, மறுமகனையோ தன் மகளாக , மகனாக ஏற்பது இவர்கள் கடமை. அதே போல், தன் புது மாமியார், மாமனாரை , மறு தாய் , தந்தையாக பார்க்க வேண்டியது மருமகள், மருமகனின் கடமை . ஆனால் மாறாக,  அவர்களுக்கு ஆற்றும் கடமை ஏமாளித்தனம் என ஒருவர் மனம் யோசித்தாலே புது உறவு பாரமாக தெரிகின்றது. கடமை மறக்கப் படுகின்றது அல்லது குறைக்கப் படுகிறது . 

அப்பொழுது எவ்வாறு, கடமைகளை பின் தொடர்ந்து வரும் தியாகம் சுவாரசியமாக இருக்கும்? கடைசியாக , முதல் கோணல் முற்றிலும் கோணல் என , கடமைகளில் குளறுபடி ஏற்பட்டு , தியாகம் என்று ஒன்று உள்ளதா என கேள்வி எழுப்பும் நிலை அமைகிறது. முன்னுதாரணமாக இருக்க வேண்டிய பெற்றோர் முதலில் மாற வேண்டும். தன் பிள்ளைகளின் குடும்பத்தை தன் குடும்பமாக நினைத்து கடமையாற்றும் பெற்றோரை மனம் புரிந்து பிள்ளைகளும் , மறு பிள்ளை உறவுகளும் மதிப்பளித்து  மாற வேண்டும். 

அப்பொழுது தான் , கடமையை தொடர்ந்து வரும் தியாகம் சுவாரசியம் கூடி , புது புது தியாகங்களுக்கும் நல்ல அர்த்தங்கள் உண்டாகும் . பெற்றோர் பிள்ளை உறவை மட்டுமல்ல , மற்ற உறவுகளின் கடமைகளில் உள்ள தியாகங்களின் சுவாரசியத்தை கூட்டுவதும் சமுதாயத்தின் கையில் தான் உள்ளது. தனி மனித மாற்றம் சமுதாயத்தை மாற்றட்டும்.

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக