வெள்ளி, 30 ஜூன், 2017

கற்பனையில் நினைத்தது எல்லாம் நிஜமாக தோன்றுதிங்கே ! | வெற்றி

மனதில் பல எண்ண ஓட்டங்கள். நிஜமாக நிகழ்ந்தது பாதி, நிஜமாக நிகழ்ந்து விடுமோ என பயந்தது பாதி . உண்மையில் நிகழுமா என தெரிய வில்லை. நிகழ்ந்து விடுமோ என்ற எண்ணம் தான். மீண்டும் மீண்டும் நினைப்பதனால் , நிகழாமலேயே, நிகழ்ந்து விட்டதே. நிகழ்ந்தது என்னவோ மனதில் மட்டும் தான். 

புதன், 28 ஜூன், 2017

அறிவிற்கும் உணர்ச்சிக்கும் இடையே போராட்டமா? | வெற்றி

அறிவிற்கும் உணர்ச்சிக்கும் மையமாக மூளை அல்லவா உள்ளது. தினமும் குளிப்பதனால் உடல் அழுக்கு நீங்கி விடுகிறது. தினமும் பல் துலக்குவதால் பல் அழுக்கு நீங்கி விடுகிறது. ஆனால் , மூளையில் மனம் என்ற பெயரில் நாட்பட சேர்த்து வைத்த அழுக்கை  நீக்க வில்லை எனில், அறிவிற்கும் உணர்ச்சிக்கும் இடையே உள்ள போராட்டம் அதிகரிக்க தானே செய்கிறது.  எண்ணும் எண்ணங்கள் கலங்கிய நீரை போல இருப்பதர்க்கு இந்த மன அழுக்கு அல்லவா காரணம்.

செவ்வாய், 27 ஜூன், 2017

உங்கள் எதிர்காலத்தை உங்களால் தீர்மானிக்க முடியுமா? | வெற்றி

ஏன் முடியாது? உங்கள் வீட்டில் உள்ள செல்ல பிராணி என்ன உண்ண வேண்டும், எப்பொழுது குளிக்க வேண்டும், எப்பொழுது வாக்கிங் செல்ல வேண்டும் என அதன் எதிர்காலத்தை உங்களால் தீர்மானிக்க முடியும் பொழுது, உங்கள் எதிர் காலத்தை ஏன் உங்களால் தீர்மானிக்க முடியாது? 

ஞாயிறு, 25 ஜூன், 2017

செய்த வேலைக்கு மீறிய கூலியா ! எங்கே ? | வெற்றி

செய்யும் தொழிலை நேசிக்கின்றேன். சந்தோசமாக , விருப்பமாக செய்கின்றேன், என் முதலாளியின் கம்பெனியை என்னுடையது என எண்ணி, உழைக்கிறேன் , எனக்கு நேரம் போவதே தெரிய வில்லை. பதவி உயர்வு இல்லையே, வாழ்க்கைக்கு தேவையான பணம் உழைத்த உழைப்புக்கு சமமாக சம்பளமாக கிடைக்க வில்லையே என்ற ஏக்கம் என்னிடம் இல்லை. எதிர் பாராத பதவி உயர்வும், சம்பளமும் என் வீட்டு கதவை தட்டியது. ஏன் ?

புதன், 21 ஜூன், 2017

நீங்களே உங்களை 'சபாஷ்' என்று பாராட்டுங்கள் ! | வெற்றி


காலையில் எழுந்தது முதல், படுக்க போகும் வரை, எத்தனையோ காரியங்களை நகர்த்துக்கின்றோம். இதில், சரிப்பட நகர்த்திய காரியங்களும் உண்டு , சரிப்பட நகர்த்தப் போடப்பட்ட திட்டங்களும் உண்டு, வெற்றி தள்ளிப் போன நிலைகளும் உண்டு, தோல்வி அடைந்து விட்டதாக முடிவெடுத்த தருணங்களும் உண்டு.  

செவ்வாய், 20 ஜூன், 2017

மனித வளர்ச்சிக்கு மதத்தின் தேவை ! | வெற்றி

உண்ணும் உணவு, அணியும் உடை , செய்யும் தொழில் , இருக்கும் இடம் என சமூகத்தில் அனுபவிக்கும் ஒவ்வொரு ஆனந்தத்தையும் வளர்ச்சியையும் அடைய - சாதிப் பிரிவையோ , மதப் பிரிவையோ நாம் பார்ப்பது  இல்லை. 

ஞாயிறு, 18 ஜூன், 2017

மனோதைரியம் உங்கள் ஆயுதம் ! | வெற்றி

தைரியத்தில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று உடல் தைரியம் , மற்றொன்று மனோ தைரியம். உடல் தைரியம் என்பது உடல் வலிமை. மனோ தைரியம் என்பது மன வலிமை.உடல் தைரியமே மனோ தைரியத்தை நம்பி தான் உள்ளது.வியாழன், 15 ஜூன், 2017

மிகப் பெரிய பிரச்சனையா? | வெற்றி

என்ன நடந்து விடப் போகிறது. மீறி மீறி போனால் , இறுதியில் உயிர் போகி விடும் அவ்வளவு தானே! ஒரு நாள் போக வேண்டிய உயிர் தானே! ஐயோ ! பிரச்சனை வந்து விட்டதே என்று புலம்பினால் ? அனைத்தும் சரியாகி விடுமா ? என்ன? 


பிரச்சனைகளை தீர்க்கும் வழிகளில் ஒன்று ! | வெற்றி

வாழ்க்கை போராட்டத்தில் பிரச்சனைகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. பிரச்சனைகள் வரும் பொழுது, அதற்கான தீர்வுகளும் தொடர்ந்து தான் வரும். தீர்வுகளை எளிதாக எட்டுவதற்கான வழி முறைகளில் ஒன்று தான் பிரித்து பார்த்து தீர்வை எட்டும் முறை.

செவ்வாய், 13 ஜூன், 2017

மதுவும் மாதுவும் வாழ்க்கைக்குத் தேவையா? | வெற்றி

மனிதர்கள் மிகவும் விவரமானவர்கள். அதில், மாற்றுக் கருத்து இல்லை. 

இந்த விவரத்தின் அடுத்த கட்டமாக, பலரின் பொழுது போக்கு மதுவும் மாதுவும் தான். இதனை நியாயப் படுத்தும் விதமாக நாம் வணங்கும் கடவுளே பல பொண்டாட்டிக்காரர் தானே ? என்பர்.

இவ்வகை மனிதர்களுக்கு ஒர் கேள்வி.

திங்கள், 12 ஜூன், 2017

நடக்குமா நடக்காதா? | வெற்றி


நம்மில் பலரின் வாழ்நாட்கள் நடக்குமா நடக்காதா ! என்ற எண்ணத்திலேயே கழிந்து விடுகிறது. இந்த சந்தேகத்துடன் வாழ்பவருக்கு நடக்காமல் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் தான் அதிகம்.

ஞாயிறு, 11 ஜூன், 2017

எட்டாத உயரத்தையும் எட்டுவதற்கு? | வெற்றி

வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் சில விஷயங்கள் எட்டாத கனியாகவே , ஏக்கத்தை தருகின்றன. எப்பொழுதும் கிடைத்ததை விட, கிடைக்காததை எண்ணியே மனம் ஏங்குகிறது. அந்த, கிடைக்காப்  பொருள் தான் உலகிலேயே விலை மதிப்பில்லாததாக மனதில் தோன்றுகிறது. இது இயற்கை. 

வெள்ளி, 9 ஜூன், 2017

உங்கள் மேலதிகாரி உங்களை கடிந்துக் கொள்பவரா? | வெற்றி

சந்துருவைக் கண்டாலே அவன் மேலதிகாரிக்கு வெறுப்பு. இது சரி இல்லை அது சரி இல்லை என எப்பொழுதும் அவனை கடிந்துக் கொள்வார். இவரை சமாளிப்பது சந்துருவிற்கு ஒரு சவாலாக இருந்தது.

உங்கள் மேலதிகாரியும் இதே போன்றவரா? இதோ ஒரு டிப்ஸ்.

புதன், 7 ஜூன், 2017

மீன் குட்டிக்கு நீந்த சொல்லி தர வேண்டுமா? | வெற்றி

மீன் குட்டி என்றும் தன் தாயிடம் நீந்த கற்று தர சொல்லி கேட்பதில்லை. தானே நீந்தும் . தன் பிரச்சனைகளில் இருந்து தானே வெளியே வர, மனிதன் உள்ளார்ந்த ஆற்றலைக் கொண்டு உள்ளான்  .

உத்தமன்  ஒரு அடர்ந்த காட்டு வெளியில், வேலை முடித்து விட்டு , வீட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்தான். 

செவ்வாய், 6 ஜூன், 2017

நிம்மதியான மனம் வேண்டும் ! | வெற்றி

"வாழும் வாழ்க்கைக்கு காசு பணம் தேவை இல்லை . நிம்மதி ஒன்றே போதுமடா ! எனும் எண்ணம் தோன்றும் பொழுது மனம் அனைத்தையும் கண்டு நொந்து நூலாய் போயிருக்கும் , என் செய்ய ? மனிதப் பிறவி எடுத்து விட்டோம். வாழ்ந்து தானே ஆக வேண்டும்.", பெரும்பான்மை மக்களின் புலம்பல் இது.

ஞாயிறு, 4 ஜூன், 2017

நியாயத்தை எத்தனை காலம் தான் ஏமாற்ற இயலும்? | வெற்றி

ஏமாற்றம் மனித குலத்தில் சகஜமான ஒன்று. ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் ஏதோ ஒரு கால கட்டத்தில் ஏமாறி தான் இருப்பார். ஏமாற்றம் என்றாலே நியாயத்திற்கு புறம்பான ஒன்று தானே? முள்ளை முள்ளால் தான் எடுக்க இயலும் என்பது போல , ஏமாற்றத்திற்கு தீர்வாக ஏமாற்றுவதை தான் பலர் மனம் விரும்புகிறது. நீங்கள் ஏன் இலஞ்சம் வாங்கினீர்கள்? என்றால் , நான் இலஞ்சம் கொடுக்கிறேன் , அதனால் வாங்குகிறேன் என கூறுபவர்கள் ஏறலாம் .

வெள்ளி, 2 ஜூன், 2017

நீ நீயாக இரு ! | வெற்றி

வாழும் காலம் சில. வாழ்க்கையில் மாற்றங்கள் பல. எது வந்தாலும் போனாலும் நீ நீயாக இருப்பதே சிறப்பினைத்  தரும். குயில் குயிலாக இருக்கும் பொழுது தான் அதன் திறமை பாடுவது   என உலகம் அறியும் . மயில் மயிலாக இருக்கும் பொழுது தான் அதன் திறமை ஆடுவது என உலகத்திற்குப் புரியும். 

வியாழன், 1 ஜூன், 2017

பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டிய இடம்… | வெற்றி

ஒரு நாள் காலைப் பொழுதில் நான் நடைப் பயணத்தில் இருந்தச் சமயம் , ஒரு நாய் என்னைப் பின் தொடர்ந்தது.

எனக்குள் ஒரு பயம். வேகமாக விரைந்தேன். அதுவும் என்னை வேகமாக பின் தொடர்ந்தது. ஓடினேன். அதுவும் என் பின்னால் விரைவாக ஓடி வந்தது. காரணம் புரியவில்லை.