புதன், 21 ஜூன், 2017

நீங்களே உங்களை 'சபாஷ்' என்று பாராட்டுங்கள் ! | வெற்றி


காலையில் எழுந்தது முதல், படுக்க போகும் வரை, எத்தனையோ காரியங்களை நகர்த்துக்கின்றோம். இதில், சரிப்பட நகர்த்திய காரியங்களும் உண்டு , சரிப்பட நகர்த்தப் போடப்பட்ட திட்டங்களும் உண்டு, வெற்றி தள்ளிப் போன நிலைகளும் உண்டு, தோல்வி அடைந்து விட்டதாக முடிவெடுத்த தருணங்களும் உண்டு.  


சந்திரனின் வேலை, விற்பனைத் துறையில். அடிக்கடி வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும் தொழில் துறை. சவாலான தருணங்கள் அவர் வேலையில் அடிக்கடி வரும். ஒவ்வொரு முறை சவால் வரும் பொழுதும் அதில் இருந்து மீண்டு , வெற்றி அடைந்த தருணங்கள் ஒரு நாளில் 5 என்றால் , தோல்வி தருவிய தருணங்கள் 2 . 

அவர் ஒவ்வொரு முறை , இரவு படுக்கச் செல்லும் பொழுதும். உடல் அலுப்பு தாளாது. இந்த தோல்விகளை நினைத்து நினைத்து , மன அலுப்பு அதிகரித்து , உடல் அலுப்பும் 10 மடங்கு அதிகரித்து விடுகிறது அவருக்கு. அலுப்புடன் ஒவ்வொரு இரவும் உறங்கச் செல்லும் அவருக்கு , அடுத்த நாள் விடியல், 'எப்பொழுது வேலையில் இருந்து   நிரந்தர ஓய்வு வருமோ!' என்ற எண்ணத்தில் தான் தொடங்கும்.

இதே சந்திரன் , அவர் தினமும் அடைந்த தோல்விகளை எண்ணி உறங்க செல்லாமல், தினமும் அவர் அடைந்த வெற்றிகளை எண்ணி , அவரையே அவர் 'சுபாஷ் சந்திரா ! நீ இன்று இத்தனை வெற்றிகளை கண்டு உள்ளாய் !' என தன்னையே தான் பாராட்டி உறங்க சென்று இருந்திருந்தால் , அவர் உறக்கமும் நன்றாக அமைந்திருக்கும். அவர் விடியலும் உற்சாகமாக இருந்திருக்கும்.

நம் தோல்விகளை எண்ணி எண்ணி நமக்கு நாமே நொந்து நூலாகும் நாம், நம் வெற்றிகளை நினைத்து நமக்கு நாமே பாராட்ட தெரிந்து இருந்தால் , ஒரு படி வெற்றியெனும் வாழ்க்கையில் சேர்த்து அடைவோம். நம்மை அடுத்தவர் பாராட்ட காத்திருக்க வேண்டியதில்லை. நம்மை நாமே  பாராட்டா விட்டால் யார் பாராட்டுவார்கள் ! 

எனவே, ஒரு சிறு வேலையை  சரியாக முடித்தாலும்,  உடனே உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்.


வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக