வியாழன், 15 ஜூன், 2017

மிகப் பெரிய பிரச்சனையா? | வெற்றி

என்ன நடந்து விடப் போகிறது. மீறி மீறி போனால் , இறுதியில் உயிர் போகி விடும் அவ்வளவு தானே! ஒரு நாள் போக வேண்டிய உயிர் தானே! ஐயோ ! பிரச்சனை வந்து விட்டதே என்று புலம்பினால் ? அனைத்தும் சரியாகி விடுமா ? என்ன? நம் பிரச்சனையை நாம் தான் தீர்த்தாக வேண்டும். யாரும் வரப் போவது இல்லை. பிரச்சனை தீர்க்கப் பட வேண்டும் எனில் , அதனை விட்டு முதலில் வெளி வந்து, மூன்றாவது நபராக பிரச்சனையை பார்க்க வேண்டும். ஏனெனில் , சிறு பிரச்சனை கூட பெரியதாக தோன்றும், பிரச்சனையில் இருந்து வெளி வராத வரை. 

எத்தனையோ பிரச்சனைகளுக்கு , இதற்கு போயா இத்தனை புலம்பினோம் என நாட்கள் கடந்து யோசித்து இருப்போம். யாருக்கும் இல்லாத அதிசய பிரச்சனையை நாம் சந்தித்து விடப் போவது இல்லை. எங்கோ ஒருவர் சந்தித்துக் கொண்டு தான் இருப்பார்.

வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      


சிறிது நேரம் எடுங்கள் , மனம் பதட்டத்தில் இருந்து தணிந்து சாதாரண சூழ்நிலைக்கு வர. பின்பு , பிரச்சனையின் மூலக் காரணத்தை யோசித்து அதனை சரி செய்ய முயலுங்கள் . முடிந்த வரை , சரி செய்யுங்கள். தீர்க்க இயலாத பிரச்சனைகள் என்பது மிக அரிது தான். பெரும்பாலும் பிரச்சனைகளுக்கு தீர்வு உண்டு.

முடியாததை நேர் மறை எண்ணத்தோடு தாங்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

எதையும் எதிர்கொள்ளும் சத்தியை இயற்கை நமக்கு வழங்கி உள்ளது.

தமிழ் பொன்மொழிகள்:
வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக