ஞாயிறு, 25 ஜூன், 2017

செய்த வேலைக்கு மீறிய கூலியா ! எங்கே ? | வெற்றி

செய்யும் தொழிலை நேசிக்கின்றேன். சந்தோசமாக , விருப்பமாக செய்கின்றேன், என் முதலாளியின் கம்பெனியை என்னுடையது என எண்ணி, உழைக்கிறேன் , எனக்கு நேரம் போவதே தெரிய வில்லை. பதவி உயர்வு இல்லையே, வாழ்க்கைக்கு தேவையான பணம் உழைத்த உழைப்புக்கு சமமாக சம்பளமாக கிடைக்க வில்லையே என்ற ஏக்கம் என்னிடம் இல்லை. எதிர் பாராத பதவி உயர்வும், சம்பளமும் என் வீட்டு கதவை தட்டியது. ஏன் ?

என் போன்ற தொழிலாளி கிடைப்பது என்பதே ஒரு அறிய வாய்ப்பு தானே! யாருக்கு ? என் முதலாளிக்கு.

உங்கள் பார்வைக்கு,  சங்கரனின்  கதை, இதோ !


சங்கரன் ஒரு சிறிய ஹோட்டலின் சாதாரண கிளீனிங் வேலை செய்யும் பணியாள். அவரை  போலவே மற்ற பணியாளர்களும் 10 பேர் இருந்தனர். ஆனால் சங்கரனுக்கு
ம் , மற்ற பணியாளர்களுக்கும் ஒரு வித்தியாசம் இருந்தது. மற்ற அனைவரும் கொடுத்த சம்பளத்திற்கு மட்டுமே வேலை செய்தனர். ஆனால் சங்கரனோ செய்ய வேண்டிய வேலைக்கு மேலே , பல வேலைகளை இழுத்துப் போட்டு கொண்டு செய்தார். ஹோட்டல் மேஜையை மட்டும் துடைப்பது இல்லாமல், கொடுத்த சம்பளத்திற்கும் மேலாக யாரும் செய்ய முன் வராத பாத்திரம் கழுவும் வேலையையும் செய்து முடித்தார். இரவு ஹோட்டலுக்கு வந்த முதலாளிக்கு ஒரே ஆச்சரியம். கேட்காமல் கிடைக்கும் உதவி -  யாருக்கு பிடிக்காது?

இப்படி ஒரு பணியாள் கிடைத்தால் யாருக்குப் பிடிக்காது? சரியாக கூறினால் , அந்த பாத்திரங்களை கழுவ தான் அந்த முதலாளியே கடைக்கு வந்து இருந்தார். பாத்திரம் கழுவ ஆட்கள் இது போன்ற சிறிய ஹோட்டல்களில் கிடைப்பது மிகக்  கடினமான ஒன்று.


சங்கரனின் செயலை கண்ட முதலாளி அவரை அணைத்துக் கொண்டு , கல்லாவை பார்த்துக் கொள்ளும் பதவி உயர்வையும் கொடுத்து, சம்பள உயர்வையும் கொடுத்தார். செய்த வேலைக்கு மீறின கூலி , சங்கரனின் கைகளில்.


வேலை செய்யும் இடத்தில் கணக்கு பார்க்காமல், வேலை செய்தால் , முதலாளியும் கணக்கு பார்க்காமல் அள்ளி கொடுப்பார். இது நிதர்சனமான உண்மை.

வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்
வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக