ஞாயிறு, 4 ஜூன், 2017

நியாயத்தை எத்தனை காலம் தான் ஏமாற்ற இயலும்? | வெற்றி

ஏமாற்றம் மனித குலத்தில் சகஜமான ஒன்று. ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் ஏதோ ஒரு கால கட்டத்தில் ஏமாறி தான் இருப்பார். ஏமாற்றம் என்றாலே நியாயத்திற்கு புறம்பான ஒன்று தானே? முள்ளை முள்ளால் தான் எடுக்க இயலும் என்பது போல , ஏமாற்றத்திற்கு தீர்வாக ஏமாற்றுவதை தான் பலர் மனம் விரும்புகிறது. நீங்கள் ஏன் இலஞ்சம் வாங்கினீர்கள்? என்றால் , நான் இலஞ்சம் கொடுக்கிறேன் , அதனால் வாங்குகிறேன் என கூறுபவர்கள் ஏறலாம் .


இவ்வித நடவடிக்கைகளால் சமுதாயத்தில் வேண்டுமானால் வென்று விடலாம். அறிவு மிக்கவன் பிழைத்துக் கொள்வான் என பெயர் எடுக்கலாம். உள்  மனத்தை , அடக்கி, ஆண்டு, தன் செயலுக்கு விளக்கம் தந்து வாழ்ந்து விடலாம். ஆனால், முடிவு?

எத்தனுக்கு எத்தன் இல்லாமல் இல்லை. நியாயத்திற்கு புறம்பான காரியங்கள் செய்ய செய்ய நம் மீதான பலவீனங்கள் மிகக் கூடும். அடுத்தவர் கட்டுப் பாட்டுக்குள் வாழ்பவராக தானாக நம்மை அறியாமலேயே மாற்றப் படுவோம் . அடுத்தவர் கட்டுப் பாட்டில் வாழ்பவருக்கு நிம்மதி ஏது? 
 
கலா , கலை இருவரும் உற்ற தோழிகள். இருவரும் சேர்ந்து ஒரு காய் கறி கடை ஆரம்பித்தனர். கலாவும் , கலையும் மாறி மாறி கடையை பார்த்து கொண்டனர். இருவர் எண்ணமும் ஒருவரை ஒருவர் எவ்வாறு ஏமாற்றி திருட்டு காசு எடுப்பது என்பதினிலேயே இருந்தது. இந்த நியாயமற்ற செயல்களால் என்ன நடந்திருக்கும்?

ஒருவரை ஒருவர் ஏமாற்றுவதை கடையில் வேலை செய்யும் சிறுவன் கவனித்து விட்டான். இந்த இருவர் பலவீனத்தையும் பயன் படுத்தி இருவரிடமும் எத்தனுக்கு எத்தனாக பணம் பறித்தான் . கலா மற்றும் கலை புத்திசாலியாக வாழ்வதாக நினைத்தாலும் , எங்கே அந்த சிறுவன் காட்டி கொடுத்து விடுவானோ ? என்ற பயமே அவர்கள் நிம்மதியை அழித்தது .   


வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      


கடைசியாக , இருவரும் சேர்ந்து நியாயமாக எவ்வாறு இலாபம் சம்பாதிக்கலாம் என்னும் தடம் புரண்டு, சிறுவனால் மாட்டப் பட்டு விடுவோமோ என்ற பயத்திலேயே வாழ்க்கையை ஓட்டினர்.அந்த சிறுவனுக்கும் ஒரு நாள் எத்தன் வந்தான். அவ்வாறு சேர்த்தப் பணத்தை வைத்து அந்த சிறுவன் ஒரு விலை உயர்ந்த செல்போன் வாங்கினான் . ஒரு காய்கறி கடையில் வேலை செய்யும் சிறுவனால் எவ்வாறு விலை உயர்ந்த செல்போன் வாங்க முடியும் என்று , பக்கத்து வீட்டில் குடி இருந்த ஒரு காவலாளி அந்த செல்போனை பறித்து விட்டு அவனை திருடன் என பட்டம் கட்டி சிறையில் அடைத்தார் .

அவன் குடும்பம் அவனை சிறையில் இருந்து மீட்க லஞ்சம் கொடுக்க தயாரானது . அந்த லஞ்சம் கொடுத்த பணத்தை எவ்வாறு அந்த குடும்பம் மீட்க இயலும்? மீண்டும் ஒரு நியாயமற்ற வேலை தான். இதுவே சமுதாய சுழற்சி. புத்திசாலியாக பிழைக்கிறோம் என வாயளவில் சொல்லலாம் . ஆனால் , நிஜம் என்ன?

சரியான அஸ்திவாரம் இல்லாத சொகுசான இடத்தில் நிம்மதி கெட்டு இருப்பர்.     நியாயம் ஏமாற்ற பட்டதாக எண்ணப் பட்டாலும் , உண்மையில் ஏமாற்ற பட்டு உள்ளதோ நியாயத்தை ஏமாற்றி வாழ்பவர்கள் தான். நியாயமானவர்கள் பொருளாதாரத்தில் சிறிது குறைவாக இருந்தாலும் நிம்மதியுடன் , மனசாட்சிக்கு கட்டுப் பட்டு வாழ்வர்.

   
மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக