செவ்வாய், 6 ஜூன், 2017

நிம்மதியான மனம் வேண்டும் ! | வெற்றி

"வாழும் வாழ்க்கைக்கு காசு பணம் தேவை இல்லை . நிம்மதி ஒன்றே போதுமடா ! எனும் எண்ணம் தோன்றும் பொழுது மனம் அனைத்தையும் கண்டு நொந்து நூலாய் போயிருக்கும் , என் செய்ய ? மனிதப் பிறவி எடுத்து விட்டோம். வாழ்ந்து தானே ஆக வேண்டும்.", பெரும்பான்மை மக்களின் புலம்பல் இது.

ஏன் , எதற்கு என்று தெரியும் முன்பே அனைத்தும் முடிந்து விடுகிறது. சாப்பிட்டாயா? என்று மனதார கேட்க கூட உறவுகள் இல்லை. கேட்கும் எண்ணம் கொண்ட உறவுகளுக்கோ கேட்க நேரம் இல்லை. எதற்காக ஓடுகின்றோம் என தெரியாமலேயே ஓடுகின்றோம் , பார்ப்பவர்கள் அனைவரும் ஓடுகிறார்கள் , நாமும் ஓட வேண்டும் என எண்ணி ஓடுகின்றோம்.

ஓடும் பொழுது மூச்சிறைக்கிறது. நிற்க இயல வில்லை. நின்று விட்டு , திரும்பி பார்த்தல் அருகில் உள்ளவன் உன்னால் ஓட முடிய வில்லையா? என இளக்காரமாக சிரிக்கின்றான் என தவித்துக் கொண்டே மூச்சிறைக்க ஓடுகின்றோம். 


வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      இதில் தான் நிம்மதி , இல்லை அதில் தான் நிம்மதி என தேடினால் , கடைசியில் தெரிவதோ பூஜியம் தான். 


இன்றைய தினம் நம்மால் நிம்மதியுடன் வாழ இயல வில்லை எனில் , நாளை நாளை என நிம்மதியை தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பதில் பலன் என்ன?. நிம்மதி என்று தனியாக எங்கும் இல்லை , தேடுவதற்கு. பத்து நல்லது இருந்தால் , ஒன்றேனும் தவறாக இருக்க தான் செய்யும். அனைத்தும் திருத்தப் பட்ட 100% சரியான வாழ்க்கை எவருக்கும் அமைவது இல்லை. 

இன்று கிடைத்த நல்லதை எண்ணி நிம்மதியுடன் உள்ளோமா ? அல்லது ஒரு சிறிய தீமையையும் எண்ணி நிம்மதி இழக்கிறோமா? என்பது நம் கைகளில் தான் உள்ளது.   

மேலும் பல இலவச முன்னேற்ற கருத்துத் துளிகளை Email ல் பெற... Subscribe Here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக