ஞாயிறு, 11 ஜூன், 2017

எட்டாத உயரத்தையும் எட்டுவதற்கு? | வெற்றி

வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் சில விஷயங்கள் எட்டாத கனியாகவே , ஏக்கத்தை தருகின்றன. எப்பொழுதும் கிடைத்ததை விட, கிடைக்காததை எண்ணியே மனம் ஏங்குகிறது. அந்த, கிடைக்காப்  பொருள் தான் உலகிலேயே விலை மதிப்பில்லாததாக மனதில் தோன்றுகிறது. இது இயற்கை. 

அனைவருக்கும் அனைத்தும் கிடைத்து விடுவது இல்லை . நாம் ஏங்கும் பொருளோ, குறிக்கோளோ முதலில் நியாயமானதா என ஆராய வேண்டிய அவசியம் உள்ளது.

நாதன் கலை துறையை சார்ந்த குடும்பத்தை தன் பரம்பரையாக கொண்டவர். சரியான மனம் கொண்டு, கவனதோடு செயல் புரிந்தால் , அவரால் புகழ் பெற்ற பாடகனாக வர இயலும். இதுவே அவரின் ஏக்கமும் கூட. எட்டாத உயரமாக அவர் கண் முன்னே இருப்பதும் இதுவே .


வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      


ஆனால் , அவரோ, தன் திறமைக்கு ஒப்பில்லாத, நாட்டின் பிரதமர் ஆக வேண்டும் என்ற ஏக்கம் கொண்டால்?  

முதலில் எட்டாத உயரம் எது என்பதில் தெளிவு தேவைப் படுகிறது.  தேவை இல்லாத ஏக்கத்தை விட்டொழிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. 

அதன் பின்,எண்ணியதை எட்ட - 
கவனம், பொறுமை , நேர்மறை எண்ணம், செய்யும் செயலில் ஈர்ப்பு என அனைத்து தந்திரங்களையும் பயன் படுத்த வேண்டும் . பின் ,  ஒரு நாள்,  'எட்டா கனியும்' நம் கைகளில் !

தமிழ் பொன்மொழிகள்:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக